
வட மாநிலங்களில் செய்யப்படும் விதவிதமான அயிட்டங்களில் மிகவும் ஸ்பெஷலான இரண்டு (மால் புவா மற்றும் பலாக்காய் சப்ஜி (கட்ஹல் சப்ஜி) அயிட்டங்களை இப்போது பார்க்கலாம்.
மால் புவா செய்முறை:
தேவையான பொருட்கள்:
மைதா – 1 கப்
ரவை – ¼ கப்
பால் – ½ கப்
சோம்பு – ½ spoon
சர்க்கரை – 1 ¼ கப்
ஏலக்காய் பவுடர்
முதலில் மைதா மாவில் ரவை, ¼ கப் சர்க்கரை மற்றும் ½ spoon சோம்பை கலந்து பாலையும் தண்ணீரையும் உற்றி கரைக்கவும். அப்பத்திற்கு எப்படி கரைப்போமோ அவ்வாறு கரைத்து 30 நிமிடத்திற்குமூடி வைக்கவும். சோம்பு போட மறந்து விடாதீர்கள். ஏனென்றால் இந்த மால் புவாவின் சிறப்பு இந்த சோம்புவின் flavour ல்தான் இருக்கிறது.
வாணலியில் அல்லது அடிகனமான பாத்திரத்தில் தேவையான தண்ணீரை ஊற்றி ஒரு கப் சர்க்கரையை போட்டு பாகு தயாரிக்கவும். கம்பி பாகு தேவையில்லை. மிதமான பாகு பதம் வந்ததும் அடுப்பை அணைத்து ஏலக்காய் பவுடரைத் தூவவும்.
இப்போது வாணலியில் எண்ணெய் வைத்து காய்ந்த பிறகு கரைத்த மைதா மாவை கரண்டியால் ஒன்றன்றாக ஊற்றி பூரியைப்போல் பொறிக்கவும்.
நன்றாக கரண்டியால் பூரியை அழுத்தி மேலுள்ள எண்ணெயை எடுக்கவும். பிறகு அதை சர்க்கரைப் பாகில் பத்து நிமிடத்திற்கு போட்டு எடுக்கவும். எல்லா பூரியையும் பொறித்து இதேபோல் பாகில் போட்டு எடுக்கவும். மேலே ட்ரை ஃபுருட்ஸை நெய்யில் வறுத்து போட்டு அலங்கரிக்கவும். டேஸ்டியான மால் புவா ரெடி!
பலாக்காய் சப்ஜி:
பொதுவாக நம் தமிழ்நாட்டில் நாம் பலா பழத்தைத்தான் விரும்பி உண்வோம். பலாபழத்தில் வெல்லமும் தேனும் கலந்து பாயசம் செய்தால் சுவையோ சுவை. வட இந்தியாவில் முக்கியமாக பீகாரில் பலாக்காயை விரும்பி உண்பார்கள். ஹோலிப்பண்டிகையின்போது அவர்கள் கட்டயமாக இந்த பலாக்காய் சப்ஜியை செய்வார்கள்
பலாக்காய் சப்ஜி ரெசிபி:
முதலில் ½ kg பலாக்காயை நன்றாக தோலை நீக்கி cube. ஆக வெட்டிக் கொள்ளுங்கள். வெட்டும்போது கைகளில் எண்ணெய் தடவிக் கொள்ளவும். மிகவும் முற்றின காயை வாங்காதீர்கள். அதில் ருசி இருக்காது. காயை வெட்டிய பிறகு குக்கரில் தேவையான உப்பு மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து நான்கு அல்லது ஐந்து விசில்கள் விட்டு வேகவைக்கவும். குக்கரை திறந்து பாருங்கள். பலாக்காய் வேகவில்லை என்றால் இன்னும் கொஞ்சம் வேகவைக்கவும். கைகளால் காயை அழுத்தும்போது நன்றாக அழுந்தவேண்டும்.
மிக்ஸியில் இரண்டு தக்காளி, இரண்டு வெங்காயம, ஆறு பூண்டு பல், 2 கிராம்பு, பட்டை ஒரு துண்டு, ஏலக்காய் 2, பெரிய ஏலக்காய் 1, சிறிய துண்டு அன்னாசிப் பூ, ஒரு சிறிய ஜாதிக்காய், சிறிதளவு மிளகு ஆகியவற்றை போட்டு நன்றாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு, பிரிஞ்சி இலையைப் போடவும். பிறகு சீரகத்தை போட்டு தாளிக்கவும். பிறகு அரைத்து வைத்துள்ள மசாலா, தனியாத் தூள், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் மற்றும் மசாலாவிற்கு மட்டும் தேவைப்படும் உப்பை போட்டு மிதமான தீயில் நன்றாக வதக்கவும். பிறகு வேகவைத்துள்ள பலாக்காயையும் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி கிளறிவிடவும்.
வாணலியை மூடி போட்டு மூடி நன்றாக கொதிக்க வைக்கவும். பத்து நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். அடுப்பை அணைப்பதற்கு முன்னால் தண்ணீர் தேவைப்பட்டால் ஊற்றி, கலந்த பின் அணைக்கவும். கொத்தமல்லித் தழகளைத் தூவவும்.
கட்ஹல் சப்ஜி ரெடி!