வேற லெவல் சுவையில் மணத்தக்காளி கீரை பொரியல் - மல்லி பொங்கல் ரெசிபிஸ்!

Manathakkali Spinach Poriyal-Malli Pongal
Manathakkali Spinach Poriyal-Malli Pongal
Published on

ன்றைக்கு சுவையான மணத்தக்காளி கீரை பொரியல் மற்றும் மல்லி பொங்கல் ரெசிபிஸை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.

மணத்தக்காளி கீரை பொரியல் செய்ய தேவையான பொருட்கள்.

மணத்தக்காளி கீரை-1 கட்டு

எண்ணெய்-சிறிதளவு

கடுகு-1 தேக்கரண்டி

சீரகம்-1 தேக்கரண்டி

கடலைப்பருப்பு-1 தேக்கரண்டி

துருவிய தேங்காய்-1 கைப்பிடி.

வெங்காயம்-1

வரமிளகாய்-2

உப்பு-தேவையான அளவு

கருவேப்பிலை-சிறிதளவு

மணத்தக்காளி கீரை பொரியல் செய்முறை விளக்கம்.

முதலில் பேனில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி, வரமிளகாய் 2, பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து நன்றாக வதக்கவும்.

இப்போது பொடியாக நறுக்கி வைத்திருக்கும் மணத்தக்காளி கீரை 1 கட்டு சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர்விட்டு கொதிக்க விடவும். தண்ணீர் சுண்டியதும் துருவிய தேங்காய் 1 கைப்பிடி சேர்த்து கலந்துவிடவும். அவ்வளவு தான் சுவையான மற்றும் ஆரோக்கியமான மணத்தக்காளி கீரை பொரியல் தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க.

மல்லி பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்:

சீரகசம்பா அரிசி-1/2 கப்

பாசிப்பருப்பு-1/4 கப்

உப்பு-தேவையான அளவு

இஞ்சி- 1 துண்டு

நெய்-1 தேக்கரண்டி

முந்திரி-10

மிளகு-1 தேக்கரண்டி

சீரகம்-1 தேக்கரண்டி

பெருங்காயத்தூள்-1 தேக்கரண்டி

கொத்தமல்லி-1 கைப்பிடி

பச்சை மிளகாய்-1

மல்லி பொங்கல் செய்முறை விளக்கம்.

முதலில் குக்கரில் ½ கப் சீரக சம்பா அரிசியும், ¼ கப் பாசிப்பருப்பும் சேர்த்து நன்றாக கழுவிவிட்டு 3 கப் தண்ணீர் விட்டு 20 நிமிடம் ஊற வைக்கவும்.

இதில் தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய இஞ்சி 1 துண்டு சேர்த்துவிட்டு நன்றாக வேகவைத்து எடுக்கவும். நன்றாக மசித்துவிட்டுக் கொள்ளவும்.

இப்போது கடாயில் நெய் 2 தேக்கரண்டி சேர்த்து 10 முந்திரியை வறுத்துவிட்டு அத்துடன் 1 தேக்கரண்டி மிளகு, 1 தேக்கரண்டி சீரகம், பெருங்காயத்தூள் 1 தேக்கரண்டி சேர்த்து கலந்துவிட்டுக் கொள்ளவும்.

மிக்ஸியில் கொத்தமல்லி 1கைப்பிடி, பச்சை மிளகாய் 1 சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். இதை தாளித்து வைத்திருக்கும் முந்திரியுடன் சேர்த்து 2 நிமிடம் கிளறிவிடவும். கடைசியாக மசித்து வைத்திருக்கும் பொங்கலை இத்துடன் சேர்த்து கலந்துவிட்டு பரிமாறினால் சுவையான மல்லி பொங்கல் தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பாருங்கள்.

இதையும் படியுங்கள்:
இஞ்சி - எதனுடன் சேர்த்து சாப்பிட்டால் என்ன பலன்?
Manathakkali Spinach Poriyal-Malli Pongal

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com