
இஞ்சி பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட உணவுப் பொருளாகும். இஞ்சி, வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தி உடலில் உள்ள கலோரிகளை எரித்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. இஞ்சியில் ஜிஞ்சரால் இருக்கிறது. இது மலச்சிக்கல், வாயு, அஜீரணம் போன்ற பிரச்னைகளைப் போக்க உதவுகிறது.
இஞ்சி சாப்பிடுவது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி இதய சம்மந்தமான நோய்களில் இருந்து காக்கிறது. கர்ப்பகாலத்தில் இருக்கும் பெண்களுக்கு ஏற்படும் Morning sickness ஐ போக்க இஞ்சியை எடுத்துக் கொள்ளலாம். இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் குடல் மற்றும் கல்லீரல் போன்றவற்றில் ஏற்படக்கூடிய கேன்சரை சரிசெய்ய உதவுகிறது.
இஞ்சியில் உள்ள நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகின்றன. இதை எடுத்துக் கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மைத்தரும். இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இது மூட்டு வலி மற்றும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. மேலும் இஞ்சியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் சருமத்தை பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இஞ்சியை எதனுடன் சேர்த்து சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதை விரிவாக பார்ப்போம்.
1. இஞ்சி சாறை பாலுடன் கலந்து சாப்பிடும் போது வயிறு சம்மந்தமான நோய்கள் தீரும். உடல் நன்றாக இளைக்கும்.
2. இஞ்சியை துவையலாகவும், பச்சடியாகவும் செய்து சாப்பிட்டு வர மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி குணமாகும். வயிற்று உப்புசம் தீரும்.
3. இஞ்சியை சுட்டு தோய்த்து சாப்பிட உடம்பில் உள்ள பித்த, கப நோய்கள் தீரும்.
4. இஞ்சி சாறில் வெல்லம் கலந்து சாப்பிட வாதக்கோளாறு நீங்கி, உடல் பலம் பெறும்.
5. இஞ்சியை புதினாவுடன் சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய்நாற்றம் நீங்கி உடலில் சுறுசுறுப்பு ஏற்படும்.
6. காலை இஞ்சி சாறில் சிறிது உப்பு சேர்த்து சாப்பிட்டு வர பித்ததலைச்சுற்று நீங்கி உடல் இளமை பெறும்.
எனவே, இனி கட்டாயம் உணவில் இஞ்சியை சேர்த்துக்கொண்டு ஆரோக்கியமாக வாழுங்கள்.