மங்களூர் ஸ்பெஷல் கார போண்டாவும், கோசுமல்லி கொழுக்கட்டையும்!

Mangalore Special Spicy Phonda and Gosumalli Kozhukkattai!
Bonda Image
Published on

மங்களூர் ஸ்பெஷல் கார போண்டா

மைதா மாவு 1 கப்

அரிசி மாவு. 1/4 கப்

ரவை 2 ஸ்பூன்

உப்பு தேவையானது

புளித்த தயிர் 1/2 கப்

பச்சை மிளகாய் 2

பெரிய வெங்காயம் 1

கறிவேப்பிலை சிறிது

கொத்தமல்லி சிறிது

சமையல் சோடா 1 சிட்டிகை

எண்ணெய் பொரிக்க

வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். புளித்த தயிரை அரை கப் அளவு சேர்க்க ருசி கூடும்.

ஒரு அகன்ற பாத்திரத்தில் மைதா மாவு, அரிசி மாவு, ரவை, உப்பு, புளித்த தயிர், கருவேப்பிலை, கொத்தமல்லி பொடியாக நறுக்கியது சிறிது வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கியது எல்லாவற்றையும் போட்டு தேவையான அளவு நீர் விட்டு போண்டா பதத்திற்கு மாவை பிசைந்து கடைசியாக சமையல் சோடா ஒரு சிட்டிகை சேர்த்து கலந்து பத்து நிமிடம் தட்டை போட்டு மூடி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவை கையில் எடுத்து சின்ன சின்ன போண்டாக்களாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். இருபுறமும் பொன் கலரில் நன்கு பொரிந்ததும் எடுத்து சூடாக சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

மாலையில் டீ, காபியுடன் சாப்பிட சிறந்த ஸ்நாக்ஸ் இந்த மங்களூர் கார போண்டா.

கோசுமல்லி கொழுக்கட்டை

இதனை பருப்பு கொழுக்கட்டை என்றும் கூறுவார்கள்.

கோதுமை (அ) மைதா மாவு ஒரு கப் 

பயத்தம் பருப்பு கால் கப் 

கேரட் துருவல் 4 ஸ்பூன் 

தேங்காய் துருவல் 2 ஸ்பூன்

காரப்பொடி 1/2 ஸ்பூன் 

கொத்தமல்லி சிறிது 

உப்பு தேவையானது

தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன்

இதையும் படியுங்கள்:
விரத நாட்களில் ஆற்றல் தரும் உளுந்து கீரும், மிக்ஸட் நட்ஸ் சூப்பும்!
Mangalore Special Spicy Phonda and Gosumalli Kozhukkattai!

கோதுமைமாவில் செய்தால் கலர் சிறிது மட்டாக இருக்கும். மைதா மாவில் வெள்ளை வெளேரென்று பார்க்கவும் நன்றாக இருக்கும். உங்கள் சாய்ஸ் கோதுமை அல்லது மைதாமாவு எடுத்துக்கொண்டு அதில் உப்பு தேங்காய் எண்ணெய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.

பயத்தம் பருப்பை அரைமணி நேரம் ஊறவிட்டு தண்ணீரை வடித்து விடவும். அதனுடன் கேரட் துருவல், தேங்காய் துருவல், காரப்பொடி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, உப்பு சேர்த்து கலந்து வைக்கவும் இப்பொழுது மாவை பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து பூரி போல் இட்டு அதனுள் கொசு மல்லிகை வைத்து மூடி ஓரங்களை ஒட்டி விடவும் இதனை ஆவியில் ஐந்து நிமிடங்கள் வேகவைத்து எடுக்க சத்தான ருசியான கோசுமல்லி கொழுக்கட்டை தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com