மாம்பழ தேங்காய் பர்பி செய்யலாம் வாங்க!

Mango Barfi
Mango Barfi
Published on

ப்போது மாம்பழ சீசன். சுவை மிகுந்த வெரைட்டியான மாம்பழங்கள் கிடைக்கும். இந்த நேரத்தில் சூப்பர் சுவையில் மாம்பழ தேங்காய் பர்பி எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள். 

தேவையான பொருட்கள்;

நார் இல்லாத இனிப்பு மாம்பழம் - இரண்டு பெரியவை

துருவிய தேங்காய்  - இரண்டு கப்

கார்ன்ஃப்ளோர் மாவு - இரண்டு டேபிள் ஸ்பூன்

பொடித்த சர்க்கரை - ஒரு கப்

நெய்  - அரை கப்

முந்திரிப் பருப்பு    - 10

பாதாம் பருப்பு     -10

ஏலக்காய்  - 4

செய்முறை;

மாம்பழங்களை நன்றாக தண்ணீரில் கழுவி விட்டு தோல் சீவிக் கொள்ளவும். உள்ளிருக்கும் சதையை வெட்டி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கூழ் போல அரைத்துக் கொள்ளவும். அதனுடன்  பொடித்த சர்க்கரை மற்றும் கார்ன்ஃப்ளோர் மாவு சேர்த்து நன்றாக கலக்கவும்.

முந்திரிப் பருப்பு பாதாம் பருப்பு, இரண்டையும் சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்து கொள்ளவும்.

ஒரு வாணலியில் 1 ஸ்பூன் நெய் ஊற்றி தேங்காய் துருவலை அதில் கொட்டிக் கிளறவும். நன்றாக வாசனை வரும் வரை மூன்று நிமிடங்களுக்கு கிளறவும். பின்பு அதை ஒரு தட்டில் மாற்றிக் கொள்ளவும்.

வாணலியை மிதமான தீயில் வைத்து அதில் மாம்பழக் கூழ், சர்க்கரை, கார்ன்ஃப்ளோர் மாவு ஆகியவற்றை சேர்த்துக் கிளறவும்.  15 நிமிடங்கள் வரை குறைந்த தீயில் அந்த கலவை கெட்டியாகும் வரை கிளறவும். பின்பு அதில் வறுத்த தேங்காய் துருவலை கொட்டி நன்றாக கலக்கவும். அது நன்றாக கெட்டியான பதத்திற்கு வந்த பின், அடுப்பை அணைத்து விட்டு, வாணலியை கீழே இறக்கவும்.

இதையும் படியுங்கள்:
உடற்பிரச்னைகளின் அறிகுறிகளைக் காட்டும் நாக்கு!
Mango Barfi

ஒரு தட்டில் நெய்யை நன்றாக தடவி அதில் கிளறி வைத்த கலவையை பரப்பவும். அதில் முந்திரி பாதாம் மற்றும் ஏலக்காய் பொடியை தூவி நன்றாக கலக்கவும்.  ஒரு மணி நேரம் அப்படியே அதை வைத்து விட வேண்டும். பின்பு அதை தட்டில் நன்றாக பரப்பி கத்தியை வைத்து விரும்பிய வண்ணத்தில் துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும் இப்போது அருமையான சுவையான மாம்பழ தேங்காய் பர்பி தயார். இது இரண்டு மூன்று நாட்களுக்கு வைத்திருந்து சாப்பிடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com