
தேவையான பொருட்கள்:
2 கப் -சாதம் (உதிரியாக வடித்தது)
1 கப் - துருவிய மாங்காய்
1/2 டீஸ்பூன் - கடுகு
1/2 டீஸ்பூன் - உளுத்தம் பருப்பு
1 டீஸ்பூன் - கடலைப் பருப்பு
1 டீஸ்பூன் - வேர்க்கடலை
4 - காய்ந்த மிளகாய்
தேவையான அளவு - உப்பு
தேவையான அளவு - எண்ணெய்
சிறிதளவு - கறிவேப்பிலை
சிட்டிகை - பெருங்காயத் தூள்
செய்முறை:
1.கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு,வேர் கடலை தாளிக்கவும்.
2.சிவந்த பின்னர் காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து வதக்கி, மாங்காய்த் துருவல், சேர்த்து லேசாக வதக்கவும்.
3.உப்பு ,மஞ்சள் தூள் சேர்க்கவும்.
4.மாங்காய் வெந்ததும் சாதம் சேர்த்து கிளவும்...பின்னர் கருவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கவும்.