நாவூறும் நளபாகம்: கோடை ஸ்பெஷல் மாங்காய் சாதம் மற்றும் கசப்பில்லா பாகற்காய் சாதம்!

Mango rice - Bitter Gourd Pulao
Mango rice - Bitter Gourd Pulao
Updated on

மாங்காய்த் துருவல் மிக்ஸ்ட் ரைஸ்:

தேவை:

*நல்ல பச்சரிசி 1 கப்

*புளிப்பான மாங்காய்த் துருவல் 1 கப்

*நெய் 2 டேபிள் ஸ்பூன்

*மஞ்சள் பொடி 1/4 டீஸ்பூன்

*தேங்காய்த் துருவல் 3 டே.ஸ்பூன்

*பச்சை மிளகாய் 5

*இஞ்சி 1 சிறு துண்டு

*பெருங்காயப் பொடி 1/2 டீஸ்பூன்

*கடுகு 1/2. டீஸ்பூன்

*உ. பருப்பு 1 டீஸ்பூன்

*கறிவேப்பிலை சிறிது

*ரீஃபைன்ட் ஆயில் 3 டேபிள் ஸ்பூன்

*கொத்தமல்லி இலை -கொஞ்சம்

*உப்பு தேவையானது

*தண்ணீர் தேவையானது

செய்முறை:

* முதலில் அரிசியைக் களைந்து தேவையான உப்பு, மஞ்சள்பொடி சேர்த்து வேகவிட்டு உதிரியாக வடித்துத் தட்டில் கொட்டிக் கொள்ளவும்.

* பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* அடிக்கனமான வாணலியில், எண்ணெயை விட்டு அடுப்பின் மீது வைத்துக் காய்ந்தபின், நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி, தேங்காய்த் துருவல், பெருங்காயம் ஆகியவைகளைப் போட்டு இரண்டு நிமிடங்கள் வதக்கிய பின் மாங்காய்த் துருவலில் பாதியைச் சேர்த்து வதக்கி கீழே இறக்கி ஆறவிடவும். பின்னர் மிக்ஸியில் இட்டு கரகரப்பாக திரித்து எடுத்துக்கொள்ளவும்.

* கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து இத்துடன் சேர்க்கவும். கலவை ரெடி.

* தட்டிலுள்ள உதிரி சாதத்தில் தேங்காய் -மாங்காய் கலவையை போட்டு மிக்ஸ் செய்கையில், நெய்யை விட்டுக்கிளறவும். பின்னர் அதன்மீது பரவலாக, மீதி மாங்காய்த் துருவல், கொத்தமல்லி இலைகளைப் போட்டுச் சாப்பிட, சுவையாக இருக்கும்.

பாகற்காய் ஸ்பெஷல் ரைஸ்

தேவை:

* நல்ல பாஸ்மதி அரிசி 2 கப்

* பிஞ்சு பாகற்காய் 6

* வெங்காயம் 2

* பச்சை மிளகாய் 3

*கடுகு 1 டீஸ்பூன்

* தேங்காய்த் துருவல் 1/2 கப்

* மஞ்சள் பொடி சிறிது

* வறுத்த மசாலாப் பொடி சிறிது

* வெல்லப் பொடி 1 டீஸ்பூன்

* கொத்தமல்லி இலை கொஞ்சம்

*கறிவேப்பிலை கொஞ்சம்

* எண்ணெய் 4 டேபிள் ஸ்பூன்

* உப்பு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் பாஸ்மதி அரிசியைக் களைந்து உதிர்-உதிராக வடித்தெடுத்துக் கொள்ளவும்.

* வெங்காயத்தை தோல் சீவி, மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.

* பச்சை மிளகாயை நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

*பாகற்காயை அலம்பி, தோல் சீவி உள்ளிருக்கும் விதைகளை எடுத்தபின், லேசாக வட்ட வடிவில் நறுக்கிக்கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
கேஸ் இல்லாமலே சமைக்கலாம் வாங்க! சத்து குறையாத 'நோ ஆயில், நோ பாயில்' உணவுகள்!
Mango rice - Bitter Gourd Pulao

* வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், நறுக்கிய பாகற்காயைப் போட்டு பொன்னிறமாக வறுத்தெடுத்து தனியாக வைக்கவும்.

* மீதி எண்ணெயில் கடுகு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதங்கியதும், தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கவும். இத்துடன், வறுத்த பாகற்காய், மஞ்சள் பொடி, மசாலாப் பொடி, வெல்லப்பொடி போட்டுக்கிளறி, ஆறவைத்த பாஸ்மதி ரைஸுடன் சேர்த்து மிக்ஸ் செய்த பின், மேலே கொத்தமல்லி இலைகளைப் பரவலாகப் போட்டு, சிப்ஸுடன் சாப்பிடுகையில், சூப்பர் சுவையாக இருக்கும். கசப்பே தெரியாது.

logo
Kalki Online
kalkionline.com