சூப்பர் சுவையில் மசாலா சப்பாத்தி!

Masala chapati
Masala chapati

சூப்பர் சுவையில் மசாலா சப்பாத்தி!

இன்னைக்கு சப்பாத்தி செஞ்சு சாப்பிடலாம்னு ஆசையா இருக்கு. ஆனா எப்பயும் ஒரே மாதிரி சப்பாத்தி செஞ்சு, அதுக்கு தனியா குழம்பு வச்சு சாப்பிட்டு போர் அடிக்குது. இதுக்கு மாற்றா என்ன செய்யலாம்? அப்படின்னு நீங்க யோசிக்கிறீங்களா? இந்த மசாலா சப்பாத்தி ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க. இந்த சப்பாத்திக்கு தனியா சைடிஷ் செய்ய வேண்டாம். அப்படியே வெறுமனே சாப்பிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுதான் இது. 

இதையும் படியுங்கள்:
கோதுமை பணியாரம்!
Masala chapati

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு - 2 கப் 

மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் 

மிளகுத்தூள் - 1 ஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு

தயிர் - ½ கப்

எண்ணெய் - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

கரம் மசாலா - ½ ஸ்பூன் 

சீரகம் - 1 ஸ்பூன் 

கசூரி மேத்தி - 1 ஸ்பூன்

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சீரகத்தூள், மிளகுத்தூள், கரம் மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மென்மையாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளுங்கள். இதில் கொஞ்சம் எண்ணெயும் ஊற்றி பிசைந்து சுமார் 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். 

மாவு நன்கு ஊறியதும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்திக்களாக தேய்த்துக் கொள்ளுங்கள். பிறகு அதை சூடான தோசைக்கல்லில் போட்டு கொஞ்சம் எண்ணெய் சேர்த்து திருப்பிப் போட்டு நன்கு வேக வைத்து எடுத்தால், சூப்பர் சுவையில் மசாலா சப்பாத்தி ரெடி. 

நீங்கள் விரும்பினால் இதற்கு ஏதாவது குழம்பு வைத்து சாப்பிடலாம். அல்லது அப்படியே சாப்பிட்டாலும் சுவை வேற லெவலில் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com