மசாலா பணியாரம்:
தேவையான பொருட்கள்:
இட்லி மாவு - 2 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறு துண்டு
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்.
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்.
தருவிய தேங்காய் - 1/4 கப்
பெருங்காயத்தூள் - சிறிது
எண்ணெய் , உப்பு, - தேவைக்கு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் இட்லி மாவை எடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய் துருவல் மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கலக்கவும்.
பின் பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்துள்ள மாவை சிறு கரண்டியால் பணியாரங்களாக ஊற்றி மூடி போட்டு இரண்டு மூன்று நிமிடம் வேகவைத்து திருப்பி போட்டு வெந்ததும் எடுக்கவும்.
முருங்கை இலை பொரித்த குழம்பு:
தேவையான பொருட்கள்:
முருங்கைக் கீரை - 1 கைப்பிடி
முருங்கைக்காய் - 1
பாசிப்பருப்பு - 1 கப்.
தேங்காய் துருவல் - 1/4 கப்
காய்ந்த மிளகாய் - 1
தனியா - 2 டீஸ்பூன்.
உளுந்து - 1 டீஸ்பூன்.
பெருங்காயத்தூள் சிறிது
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
தாளிக்க - கடுகு - சிறிது
செய்முறை:
குக்கரில் பாசிப்பருப்பு, முருங்கைக்காய் துண்டுகளை வேக வைக்கவும். முருங்கைக்கீரையை சுத்தம் செய்து சிறிது நீர்,உப்பு சேர்த்து தனியாக வேகவைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய், தனியா, உளுந்து, தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து
ஆறிய பின் நைசாக அரைத்து வெந்த முருங்கைக்காய் பாசிப் பருப்புடன் உப்பு சிறிது சேர்த்து, வெந்த முருங்கை கீரையை சேர்த்து கலந்து கொதிக்கவிடவும்.
கொதித்து இறக்கிய பின் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து அதில் சேர்க்கவும். சுவையான சத்தான முருங்கை இலை பொரித்த குழம்பு ரெடி. சூடான சாதத்தில் நெய் ஊற்றி, இக்குழம்பை பிசைந்து சாப்பிட அசத்தலாக இருக்கும்.