கமகம வென மைசூர் பருப்பு அடை!

கமகம வென மைசூர் பருப்பு அடை!
Published on

சூடான அடை சுவையாக சாப்பிட யாருக்கு தான் பிடிக்காது? அதிலும் வித்யாசமான சுவையுடன் கூடிய இந்த ஆடை அனைவரும் சாப்பிட ஏதுவான சிற்றுண்டி ஆயிற்றே.

தேவையான பொருட்கள் :

மைசூர் பருப்பு - 250 கிராம்,

தோல் சீவிய இஞ்சி - 2 அங்குலம்,

பச்சை மிளகாய் -2,

நறுக்கிய முருங்கைக் கீரை - ஒரு கைப்பிடி,

மல்லித்தழை & கறிவேப்பிலை - சிறிதளவு

சிறு சிறு துண்டுகளாக தேங்காய் - 4 tbs,

மிளகு - 1 டீஸ்பூன்,

வெண்ணெய் - 50 கிராம்,

உப்பு - தேவைக்கு.

செய்முறை :

மைசூர் பருப்பை நன்கு கழுவி 1 மணி நேரம் முதல் ஒன்றரை மணிநேரம் வரை ஊற வைக்கவும்.

பின்னர் ஊறிய பருப்பை ஒரு மிக்ஸியில் போட்டு இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அடை மாவு வரும் பதத்திற்கு ஏற்றபடி நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைக்கவும்.

அரைத்த இந்த மாவில் நறுக்கிய கீரை, கொத்தமல்லி , கறிவேப்பிலை, மிளகு, தேங்காய் துண்டு சேர்த்து நன்கு கலக்கி தோசைக்கல்லில் சூடாக்கி சிறிது வெண்ணெய் தடவி கனமான அடையாக சுடவும். இருபுறமும் நன்கு சிவந்து வெந்ததும் எடுத்து விடவும். சத்தான ருசியான மைசூர் பருப்பு முருங்கைக் கீரை அடை தயார், இதை கீரை சேர்க்காமலும் செய்யலாம். வெங்காயமும் சேர்த்து செய்யலாம். சிறிது தேங்காய பூ சேர்த்தும் சுட்டு எடுக்கலாம்

இதனை வெண்ணெயுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். இதற்கு எல்லா சட்னி வகைகளும் சைடிஷ் ஆக தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com