மத்தூர் வடையும், பாசிப்பயறு பணியாரமும்!

healthy snacks
healthy snacksImage credit - youtube.com
Published on

த்தூர் வடை செய்து சாப்பிடுவது என்றால் அனைவருக்கும் அலாதி பிரியம் உண்டு. இதற்காக ஊறவைத்து எதையும் அரைக்க வேண்டிய தேவையில்லை. பவுடர்களை சேர்த்து கடகடவென்று செய்துவிடலாம். சாப்பிடுவதற்கு மிகவும் ருசியாக இருக்கும். அதன் செய் முறையைப் பற்றி இதோ:

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு -ஒரு கப்

ரவை -அரை கப்

மைதா- அரை கப் 

பொடியாக நறுக்கிய வெங்காயம்- முக்கால் கப் 

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்- 2 டேபிள் ஸ்பூன்

மிளகாய்ப் பொடி- ஒரு டீஸ்பூன்

தனியா தழை -ரெண்டு டேபிள்ஸ்பூன் 

வேர்க்கடலைப் பொடி- கால் கப்

பொடியாக நறுக்கிய இஞ்சி- ஒரு டீஸ்பூன் 

பொடியாக நறுக்கிய கருவேப்பிலை -இரண்டு டேபிள் ஸ்பூன்

வெள்ளை எள்- 2 டீஸ்பூன். 

உப்பு, எண்ணெய்- தேவையான அளவு. 

செய்முறை:

ஒரு அகலமான பாத்திரத்தில் மேலே கூறிய அனைத்து பொருட்களையும் போடவும். அதில் மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெயை சூடு படுத்தி ஊற்றி கிளறவும்.  பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி பிசைந்து பத்து நிமிடம் ஊறவிடவும். 

ஒரு கடாயில் எண்ணெயை காயவிட்டு ரெடியான மாவை உருண்டையாக உருட்டி குழந்தைகளுக்கு சாப்பாட்டு டப்பாவில் வைக்கும் சின்ன பூரி அளவு நன்றாக தட்டையாக தட்டி கொதிக்கும் எண்ணெயில் போட்டு மிதமான தீயில் வைத்து பொறுமையாக பொரித்து எடுக்கவும். வெங்காய வாடை உடன் கம கம மத்தூர் வடை ரெடி. இதை அப்படியே சாப்பிடலாம் சட்னி சாம்பார் தேவை இல்லை. மாலை நேர டீயுடன் சாப்பிட மழைக்காலத்திற்கு உகந்த ஸ்னாக்ஸ் இது. இதை தட்டை போல் தட்டுவதற்குதான் சற்று பொறுமை வேண்டும். மற்றபடி செய்வது எளிது. விருந்தினர்களுக்கு இதை ஒரு முறை செய்து கொடுத்தால் வரும் பொழுதெல்லாம் இதையேதான் கேட்பார்கள். செய்து அசத்துங்க.

பாசிப்பயறு பணியாரம்

தேவையான பொருட்கள்:

பாசிப்பயறு -அரைக்கப்

பச்சரிசி -அரைக்கப் 

புழுங்கல் அரிசி- அரை கப்

வெல்லம்- ஒரு கப்

தேங்காய் துருவல் -கால் கப்

ஏலக்காய்- 2 

எண்ணெய்- பொரிக்க தேவையான அளவு

இதையும் படியுங்கள்:
தன்மதிப்பு - தன்னம்பிக்கை இரண்டுக்கும் உள்ள வேறுபாடு தெரியுமா?
healthy snacks

செய்முறை:

பயறு, அரிசிகளை நன்றாக ஊறவைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் ஏலக்காய், வெல்லத் துருவல், சிறிதளவு உப்பு  மற்றும் தேங்காயையும் சேர்த்து அரைக்கவும். பிறகு பணியாரம் ஊற்றுவதற்கு வசதியாக மாவை கரைக்கவும். 

பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு காய்ந்த பிறகு குழி கரண்டியால் மாவை எடுத்து ஊற்றி இரண்டு பக்கமும் சிவக்க விட்டு எடுத்து வைக்கவும். சுவைக்க ருசியா இருக்கும். நீண்ட நேரம் பசி தாங்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com