Meal Maker Gravy: சப்பாத்தி, பூரிக்கு ஏத்த சூப்பர் சைட் டிஷ்! 

Meal Maker Gravy
Meal Maker Gravy
Published on

உங்கள் வீட்டில் எப்போதும் சப்பாத்தி பூரிக்கு ஒரே மாதிரி குருமா வைத்து போர் அடித்து விட்டதா? அப்படியானால் ஒரு முறை இந்த பதிவில் நான் சொல்லப்போகும் மீல்மேக்கர் கிரேவியை முயற்சித்து பாருங்கள். இப்போதெல்லாம் பெரும்பாலான வீடுகளில் மீல்மேக்கர் நிச்சயம் இருக்கும். அதைப் பயன்படுத்தி எளிதாக ஒரு கிரேவி உடனடியாக செய்துவிடலாம். இதை சப்பாத்தி, பூரிக்கு மட்டுமின்றி சாதத்துடனும் வைத்து சாப்பிட நன்றாக இருக்கும். 

தேவையான பொருட்கள்: 

  • 1 கப் மீல்மேக்கர்

  • 2 கப் தண்ணீர்

  • 1/2 கப் வெங்காயம், பொடியாக நறுக்கியது

  • 1/2 கப் தக்காளி, பொடியாக நறுக்கியது

  • 1 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது

  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்

  • 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள்

  • 1/2 டீஸ்பூன் சீரக தூள்

  • 1/4 டீஸ்பூன் கரம் மசாலா

  • 1/4 டீஸ்பூன் உப்பு

  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

  • 1/4 கப் கறிவேப்பிலை

  • 1/4 கப் கொத்தமல்லி தழை, பொடியாக நறுக்கியது

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் மீல்மேக்கரை சேர்த்து அதில் சுடுநீரை ஊற்றி 10 முதல் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் அதில் உள்ள நீரை வடிகட்டி விட்டு குளிர்ந்த நீரில் இரண்டு முறை அலசி விட்டு, மீண்டும் வடிகட்டி மீல்மேக்கரை பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.

இப்போது பிழிந்த மீல்மேக்கரை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கங்கள். 

அடுத்ததாக இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிய பின்னர் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். தக்காளி வெந்தவுடன் மஞ்சள் தூள் மிளகாய் தூள் சீரகத்தூள் கரம் மசாலா உப்பு சேர்த்து நன்றாக வதக்குங்கள். 

இதையும் படியுங்கள்:
மீல் மேக்கர் அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் தீமைகள் பற்றி தெரியுமா?
Meal Maker Gravy

இப்போது நறுக்கி வைத்துள்ள மீல்மேக்கரை சேர்த்து நன்கு கிளறவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு வேக வையுங்கள். இறுதியாக குக்கரின் காற்றை வெளியேற்றி, குக்கரை திறந்து கிரேவி பதத்தில் இருக்கிறதா என சரி பாருங்கள். ஒருவேளை தண்ணியாக இருந்தால் கிரேவியாக வரும் வரை சமைக்கவும். இறுதியாக கிரேவி பதத்திற்கு வந்ததும் கொத்தமல்லி தழையைத் தூவினால் அட்டகாசமான சுவையில் மீல்மேக்கர் கிரேவி தயார். 

இந்த ரெசிபியை இன்றே முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com