
மீல் மேக்கர் குழம்பு
தேவையான பொருட்கள்:
மீல்மேக்கர் - 1/4 கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -- 1 சிட்டிகை
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்.
அரைக்க:
தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
சோம்பு ,கசகசா - தலா அரை டீஸ்பூன்
சின்ன வெங்காயம், பூண்டு தலா - 2
கறிவேப்பிலை - சிறிது
மல்லித் தழை - சிறிது
உப்பு - தேவைக்கு
செய்முறை:
மீல் மேக்கரை வெந்நீரில் போட்டு எடுத்து பிழிந்து இரண்டாக நறுக்கவும். புளியை 2 கப் நீரில் கரைத்து உப்பு, மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய்த் தூள் சேர்த்து கலக்கவும்.
தேங்காய், சோம்பு, கசகசா பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சோம்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம் தக்காளி கறி வேப்பிலை மீல் மேக்கர் நேர்த்து வதக்கவும்.
பின் புளித்தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு, அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்கவிட்டு நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான மீல் மேக்கர் குழம்பு ரெடி. சாதம், சப்பாத்தி, இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிடலாம். வீட்டில் டிரை செய்து பாருங்கள்.
பாசிப்பயறு துவையல்.
தேவையான பொருட்கள்:
பாசிப்பயறு - 1/2 கப்
பூண்டு - 1 பல்
இஞ்சி - சிறு துண்டு.
தேங்காய் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்.
காய்ந்த மிளகாய் - 5
புளி - சிறிது
எண்ணெய் - 1 டீ ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து சூடாக்கி பயறை நன்கு வாசம் வரும் வரை வறுக்கவும். பூண்டு, தோல் சீவிய இஞ்சி, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், புளி ஆகியவற்றை வாணலியில் எண்ணெய்விட்டு தனித்தனியாக வறுக்கவும்.
ஆறியதும் வறுத்த பொருட்களுடன், வறுத்த பயறு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து பின் சிறிது தண்ணீர்விட்டு கெட்டியாக அரைத்து எடுக்கவும்.
சத்தான பச்சைப் பயிறு துவையல் ரெடி.
சூடான சாதத்தில் துவையலை சேர்த்து நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட ஆஹா! ஓஹோ! பேஷ் பேஷ்தான் என்று சொல்வீர்கள்.
வீட்டில் டிரை பண்ணி பாருங்கள். அப்புறம் தெரியும். இதன் சுவை.