மெதுவடை ரகசியங்கள்...

மெதுவடை...
மெதுவடை...

-தா சரவணா

பொதுவாக வெளியே செல்லும்போது, டீ கடைகளில் மெதுவடையைப் பார்த்தாலே ‘வா... வா...’ என்று கூப்பிடுவது போலவே இருக்கும்.  அக்கடைகளில் பெரிய சைசில் காணப்படும் மெதுவடைகளைப் பார்க்கும்போது, வாயில் எச்சில் ஊறும்.

ஆனால், நம்முடன் வரும் தர்மபத்தினி, நம் உடல் உபாதைகளை அப்போதுதான் நினைவூட்டுவார். அதையும் மீறி சாப்பிட வேண்டும் என அடம் பிடித்தால், வீட்டில் நான் செஞ்சு தர்றேன் என அன்புக் கட்டளையிடுவார். வீட்டில் வடை சரியாக செய்யத் தெரியவி்ல்லை என்பதற்காகத்தானே நம் நாக்கு அலை பாய்கிறது. அதை புரிந்துகொள்ளாத பத்தினியை என்ன சொல்லிப் புரியவைப்பது எனத் தெரியாமல்,
மெதுவடையை ஆசையாகப் பார்த்தபடி கடந்து விடுவோம்.

இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது, சில இடங்களில் கெட்டி சட்னியுடனும், பல இடங்களில் தண்ணீர் சட்னியும் தருவார்கள்.  வீட்டில் செய்கிற வடை மட்டும் ஏன் எண்ணெய் குடிக்கிறது? ஆறிய பிறகு ரப்பர்போல் இருக்கிறது எனத் தெரியவில்லை.

ங்கள் ஊரில் வடை மாஸ்டர் ஒருவரிடம் எப்படி டேஸ்டாக வடை சுடுவது? எனக் கேட்டு, அவர் காதைக் கடித்தபோது, “ஒரு கிலோ வெள்ளை உளுந்து அதிகபட்சம் ஒன்றரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும். அத்துடன் பொடியாக நறுக்கிய  வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, மல்லி, வேண்டும் என்றால், கொஞ்சம் புதினா அதோட கொஞ்சமா சீரகம், மிளகு எடுத்துக்கொள்ள வேண்டும்.

அப்புறம் ஊறவைத்த உளுந்தை மட்டும் தண்ணியை வடித்துவிட்டு, கிரைண்டரில் போட்டு தண்ணீர் ஊற்றாமல், ஒரு 5 நிமிடம் அரைக்க வேண்டும்.  அதன் பின்னர் தண்ணீரை மெல்ல தெளித்து, அரைக்க வேண்டும். சரியாக 40 நிமிடத்தில் மாவு பந்து மாதிரி கிளம்பும். அருகிலேயே நின்று பக்குவமா மாவு அரைக்கிறதுதான் வடைக்கு மிக முக்கியம்.  உளுந்தின் தரத்தைப் பொறுத்து  வடை எண்ணிக்கை அதிகரிக்கும்.

மாவு, கிரைண்டரில் இருந்து எடுத்ததும் நேரா எண்ணெய்க்குத்தான் போக வேண்டும். பிரிட்ஜில் வைக்கிறேன், நேரம் கழிச்சி வடை சுடுறேன்னு நினைச்சீங்கன்னா வடை வடையா இருக்காது.

வடை மாவில் மேற்படி சொன்ன அனைத்து சாமான்களையும் போட்டு, பட்டும்படாம கலக்கினால் வடை மாவு ரெடி. சோடா உப்பு எல்லாம் போட்டு உப்ப கேவலப்படுத்தக் கூடாது. எண்ணெய் நன்றாக சூடானதும், கொஞ்சமா மாவு எடுத்து எண்ணெயில விட்டு சாப்பிட்டு உப்பு பார்க்க வேண்டும். ஏன்னா எங்களுக்கு உப்பு அளவு பழகிடுச்சி. உங்களுக்கு மாவுல ஒரு மாதிரியும், வெந்ததுக்கு பிறகு ஒரு மாதிரியும் இருக்கும். அதனால் இதை செய்வது முக்கியம்.

இதையும் படியுங்கள்:
சருமம் பளபளப்பாக ஜொலிக்க சில மேஜிக் வீட்டு வைத்தியங்கள்!
மெதுவடை...

முதல் ஈடு வடையை போட்டு ஒரு ஐந்து நிமிடத்தில் எடுத்துட்டு அதுக்கு பிறகு மறு ஈடு போட்டு சீரான அளவில் எண்ணெயைக் காய வைக்கவேண்டும். அப்போதுதான் வடை உள்ளுக்குள் நன்றாக வேகும். வெளிப்புறம் கரகர என்றும் இருக்கும்” என்றார் வடை மாஸ்டர்.

நீங்களும் இதை வீட்டில் அவர் சொன்னபடி செய்துபாருங்க... நல்ல வந்துச்சுண்ணா ஓகே... இல்லைனா எல்லாரும் என்ன உங்க வீட்டுப் பிள்ளையா நினைச்சு மன்னிச்சிடுங்க...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com