சினிமா தியேட்டர் பாப்கார்ன் உண்மையில் ஆரோக்கியமானதா? நீங்கள் அறியாத உண்மைகள்!

popcorn really healthy?
medical benefits of popcorn
Published on

பெரும்பாலும் பாப்கார்னை தியேட்டர்களில் படம் பார்க்கும் போதுதான் அதிகமாக வாங்கிச் சாப்பிடுவோம். சிலர் பேருந்தில் பயணம் செய்யும்போது வாங்கிச் சாப்பிடுவார்கள். இவ்வாறு பொழுதுபோக்கிற்காகச் சாப்பிடும் பார்கார்னில் பல மருத்துவ நன்மைகள் அடங்கியுள்ளன என சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

நீங்கள் பொழுதுபோக்கிற்காகச் சாப்பிடும் பார்கார்னில் வைட்டமின் பி காம்ப்லெஸ், மாங்கனீசு, நார்ச்சத்து, பாலிபீனாலிக் கூறுகள் மற்றும் மெக்னீசியம் அடங்கியுள்ளது. இதனால், பலவித நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன.

பாப்கார்னின் தவிட்டில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் குடலில் இயக்கங்கள் சீராக இருக்கும். இதனால் மலச்சிக்கல் தவிர்க்கப்படுகிறது.

ஒரு முழு தானியமான பாப்கார்ன் மூலம் கிடைக்கப்படும் நார்ச்சத்துகள் இரத்த குழாய்களிலும், தமனியிலலும் படிந்திருக்கும் அதிக அளவு கொலஸ்ட்ராலை வெளியேற்றுகிறது.

எனவே, உடலில் கொலஸ்ட்ரால் அளவு குறைந்து, இதய நோய், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வராமல் தடுக்கப்படுகிறது.

பாப்கார்ன் நாம் தினசரி பயன்படுத்தும் காய்கறிகள் மற்றும் பழங்களை விட அதிக அளவு ஆக்ஸிஜனேற்றியாகும்.

புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்களை உண்டாக்கும் அடிப்படைக்கூறுகளை எதிர்த்து போராடுவதே இந்த ஆன்டி ஆக்ஸிடென்டின் முக்கியப் பணியாகும்.

அதிக அளவில் நார்ச்சத்து உடலில் இருக்கும்போது, இது இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவின் வெளியீடு மற்றும் நிர்வாகத்தை சிறப்பாக இயக்குகிறது. எனவே, நம் அனைவருக்கும் நார்ச்சத்து மிகுந்த உணவு அவசியமான ஒன்றாகும்.

ஒரு சராசரி அளவு கிண்ணம் பாப்கார்ன் 30 கலோரிகளை மட்டுமே கொண்டுள்ளது. இது ஒரு சிறிய பாக்கெட் உருளைக்கிழங்கு சிப்ஸை காட்டிலும் 5 மடங்கு குறைவு.

இதில் உள்ள நார்ச்சத்து நமது வயிற்றை எளிதில் நிரப்பி, பசியை தூண்டும் ஹார்மோனை சுரக்காமல் தடுக்கிறது. இதனால் உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் கூட இதனை உட்கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
வீட்டுக்கு ஒரு கைடு: பயனுள்ள குறிப்புகள்!
popcorn really healthy?

குறிப்பு:

பாப்கார்னில் சீஸ், வெண்ணை, உப்பு, மற்றும் வேறு பல சுவையூட்டிகள் சேர்க்கும்போது இவை ஒரு ஆரோக்கியமற்ற ஜங்க் உணவாக மாறுகிறது.

பாப்கார்னை வெறும் சூட்டில் பொறிப்பதே ஆரோக்கியமானது. எனவே, இதை ஆலிவ் ஆயில் மற்றும் வேறு எண்ணெய் மூலம் பொரிப்பதை தவிர்த்திடுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com