
கீரைகளில் எண்ணற்ற கீரைகள் இருந்தாலும். இந்த 40 கீரைகள் பயன்பாட்டில் இருந்து பலன் தரும் கீரைகள். ஒவ்வொன்றுக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு. (Medicinal properties of greens) கீரைகளை நேரடியாக சமையல் செய்து சாப்பிடலாம். சப்பாத்தி, ரொட்டி தயாரிக்கும் மாவில் பொடியாக நறுக்கிய கீரையை போட்டு பிசைந்து சப்பாத்தி சுடலாம். கீரையை வேகவைத்து அந்த நீரை மாவுடன் கலந்து பூரி சுடலாம். தயிர் பச்சடியில் கீரையை சேர்த்து சாப்பிடலாம்.
அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும். வாய்ப்புண்களை ஆற்றும். உடலுக்கு பலத்தை கொடுக்கும், வாரத்தில் ஒரு நாள் சாப்பிட சிறந்தது.
காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும். உடல் வீக்கங்களை குறைக்கும். இரத்தத்தினைச் சுத்தம் செய்யும் கீரைகளில் முதன்மையானது.
சிறு பசலைக்கீரை- உடல் சூட்டைத் தணிக்கும், மலச்சிக்கல் போக்கும் சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும். உடல் உள் உறுப்புகளின் செல்களை புதுப்பிக்கும்.
பசலைக்கீரை- உடல் நலத்திற்கும், மூளை வளர்ச்சிக்கும் நல்லது. தசைகளை பலமடையச் செய்யும். இரத்த சோகை நீங்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு பலம் உண்டாக்கும். இதன் சாற்றை பருகி வர முதுமையை தள்ளிப்போடலாம்.
கொடி பசலைக்கீரை- சிறுநீர் சம்பந்தமான நோயையும், வெட்டை, வெள்ளை ஒழுக்கை விலக்கும், நீர் கடுப்பை நீக்கும்.
மஞ்சள் கரிசலை- கண் பார்வையை கூர்மையாக்கும், கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும். குடற்புண், வரட்டு இருமல், ரத்த சோகையை குணமாக்கும்.
அரைக்கீரை- 10,000 யூனிட் வைட்டமின் ஏ யும்,180 யூனிட் வைட்டமின் சி யும் உள்ளது. ஆண்மையை பெருக்கும் ஆற்றல் மிக்கது. உடலுக்குப் பலத்தையும், உடலுக்கு சமஅளவு வெப்பத்தையும் தரும், பித்தத்தை தணிக்கும்.
பரட்டைக்கீரை- உடல் சூட்டைத் தணித்து வாத சம்பந்தமான நோயை தீர்க்கும்.சொறி, சிரங்கு நோய் நீக்கும், பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும். புண்ணை ஆற்றும்.
பொன்னாங்கன்னி கீரை- இதில் வைட்டமின் ஏ அதிகம் என்பதால் கிட்டப்பார்வை வராமல் தடுக்கும். உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும். இதனை துவரம் பருப்புடன் நெய் சேர்த்து சாப்பிட்டு வர உடல் சதை பிடிக்கும். சருமம் பொழிவு பெறும்.
வெள்ளை கரிசலைக்கீரை- ரத்தசோகையை நீக்கும். 4 வாரம் தொடர்ந்து மதிய உணவில் சேர்த்துக்கொள்ள தாறுமாறாக பெருத்த உள்ள உடல் பருமனை குறைக்கும், தொந்தி குறையும்.
முருங்கைக்கீரை- கால்சியம் சத்து நிறைந்தது, எலும்பு வளர்ச்சிக்கு நல்லது, காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்கள் உடல்தேற உதவும், நீரிழிவை நீக்கும், கண்கள் பார்வை தெளிவாகும், உடல் பலம்பெறும். வாய் துர்நாற்றம் நீக்கும்.
வல்லாரை கீரை- மூளைக்கு பலம் தரும். மூளை நரம்புகளை பலப்படுத்தும், மேக் நோய், வாய்ப்புண், குடல்புண்களை ஆற்றும்.
புதினாக்கீரை- உணவை செரிக்க உதவும், ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.வாந்தி, குமட்டலை தடுக்கும். வயிற்றுப்போக்கை நிறுத்தும்.
பருப்புகீரை- பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும். நுரையீரல் பாதிப்பு குறையும், இதன் சாறு அக்கி புண்களை ஆற்றும்.
புளிச்சகீரை- கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும். இரத்த மூலம், மூலவாயு ஆகியவற்றை நீக்கும்.
மணத்தக்காளி கீரை- குடல் புண்ணை நீக்கும்,வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும். உடல் சூட்டைத் தணிக்கும், வெள்ளை ஒழுக்கு நோய்களைத் தீர்க்கும்.
முளைக்கீரை- இரத்த விருத்தி அதிகரிக்கிறது, ரத்த சோகையை குணமாக்கும் பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும். ஜீரண சக்தியை அதிகரிக்கும், உடல் பலம் பெறும்.
வெந்தயக்கீரை- சிறுநீர் போக்கை சீராக்கும்,, பசியை உண்டாக்கும், 4500 யூனிட் வைட்டமின் 'ஏ 'உள்ளது. மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காசநோய்களை விலக்கும்.
வெள்ளைக்கீரை- நரம்பு தளர்ச்சியை சரி செய்யும். பெண்களின் கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகளை சரி செய்யும். தாய்பாலை பெருக்கும்.
துத்திக்கீரை- வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெளி மூலம் விலக்கும். இதன் இலையை கஷாயம் செய்து வாய் கொப்பளித்து வந்தால் பல் மற்றும் ஈறுகளில் ஏற்படும் நோய்கள் குணமாகும்.