மெக்சிக்கன் ட்ரிப் செல்பவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய 8 மெக்சிக்கன் உணவுகள்!

Mexican dishes
Mexican dishesImge credit: CNN

நாம் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும்போது ஒரு விஷயத்தில் நாம் எப்போதும் தடுமாறுவோம். ஆம்! அங்கு இருக்கும் உணவுவகைகள் எப்படி இருக்கும்? எது சுவையாக இருக்கும்? எது நமக்கு ஒத்துப்போகும் ? என்று குழப்பம் கொண்டு அந்த உணவுகளின் பெயருடனே தடுமாறி நின்றுவிடுவோம். அதேபோல் எந்த உணவு சுவையானது? எது சாப்பிடலாம்? போன்றவற்றிலும் குழப்பம் ஏற்படும். அந்தவகையில் நீங்கள் மெக்சிக்கன் செல்வதற்கு முன் அங்கிருக்கும் சுவையான உணவுகளைப் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

1. Chilaquiles:

வேகவைத்த சோளத்தை அவகேடோ சாலட் மேல் வைத்து காலை உணவாக எடுத்துக்கொள்ளும் ஒரு உணவு. சிலர் அவகேடோ சாலடில் பீன்ஸ் அல்லது கருப்பு பீன்ஸைப் பயன்படுத்துவார்கள். இந்த உணவிற்கு மெக்சிக்கோ நாட்டில் Chilaquiles என்று பெயர்.

Chilaquiles
ChilaquilesImge credit: Wikipedia

2. Pozole:

இது பழங்கால மெக்சிக்கோ நாட்டின் ஒரு மத சார்பான உணவாக கருதப்பட்டது. ஆனால் இப்போது அனைவரும் சாப்பிடும் ஒரு உணவாக மாறிவுள்ளது. இரவு முழுவதும் வேகவைத்த மசாலாப் பொருட்களையும் மூலிகைப் பொருட்களையும் ஊற வைப்பார்கள். பின் அதன் மேல் முள்ளங்கி, வெங்காயம், எலுமிச்சை சாறு, மிளகாய் சேர்த்து காலை உணவாக எடுத்துக்கொள்வார்கள்.

Pozole
PozoleImge credit: Brand New Vegan

3. Tostadas:

இந்த உணவின் பெயர் ஸ்பெயின் மொழியிடமிருந்து வந்தது. மக்காச்சோளத்தை நன்றாக நிறம் மாறும் வரை வேகவைத்து எடுத்து, அதன் மேல் கருப்பு பீன்ஸ் மற்றும் சீஸ் பயன்படுத்தி செய்யும் உணவு.

Tostadas
TostadasImge credit: I Heart Vegetable

4. Elote:

இது மெக்சிக்கோவில் சாலையோரம் விற்கப்படும் ஒரு உணவு. சோளம், தயிர் சேர்த்து நன்றாக சமைத்துவிடுவர். பின் அதன்மேல் உப்பு, மிளகாய், எழுமிச்சை சாறு, பட்டர், சீஸ், மயோனைஸ் மற்றும் கிரீம் சேர்த்து சாப்பிடக் கொடுப்பார்கள்.

Elote
EloteImge credit: Foodaciously

5. Cauliflower tacos:

இது பிரபலமான மெக்சிக்கன் உணவு. வேகவைத்த டக்கோவில் ( மாவு பயன்படுத்தி செய்யும் சப்பாத்தி போன்ற உணவு) வேகவைத்த காலிஃப்லவர், பீன்ஸ் மற்றும் சாஸ் சேர்த்து சாப்பிடும் உணவு வகை.

Cauliflower tacos:
Cauliflower tacos:Imge credit: Bon Appetit

6. Enchildas:

சீனிக் கிழங்கு மற்றும் கருப்பு பீன்ஸ் பயன்படுத்தி செய்யும் உணவு enchiladas. இந்த உணவை இறைச்சி பயன்படுத்தியும் செய்வார்கள். ஆகையால் உங்களுக்கு எந்த வகையான Enchildas வேண்டுமென்பதைப் பார்த்து வாங்கி சாப்பிடுங்கள்.

Enchildas
EnchildasImge credit: Taster Better From Scratch
இதையும் படியுங்கள்:
தென் கொரியாவின் பிரபலமான சாலை உணவு தொக்போக்கி (tteokbokki) பற்றி தெரியுமா?
Mexican dishes

7. Vegan fajitas:

இது மிகவும் ஆரோக்கியமான ஒரு உணவு. ஷீட் பேனில் காய்கறிகளை வறுத்து அதனுடன் சில மசாலாப் பொருட்கள் சேர்த்து சமைப்பார்கள். இந்த வகையான vejan fajitas உணவை நீங்கள் கட்டாயம் சாப்பிட்டுப் பார்க்கலாம்.

Vegan fajitas
Vegan fajitasImge credit: BBC
Black bean burrito
Black bean burritoImge credit: Epicurious

8. Black bean burrito:

இந்த உணவை ஸ்பேனிஷ் அரிசி பயன்படுத்தி செய்வார்கள். அதனுடன் மிளகு, கருப்பு பீன்ஸ், வெங்காயம் மற்றும் அவகேடோ சேர்த்து செய்யும் உணவு. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com