வாழ்க்கையை ஜாலியாக அனுபவித்துக் கொண்டே கோடீஸ்வரன் ஆவது எப்படி? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

Rich Guy
கோடீஸ்வரன் ஆவது எப்படி?

ஒருவன் கோடீஸ்வரன் ஆவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து, வரவு செலவு திட்டங்களை வகுத்து, சில விஷயங்களை தியாகம் செய்து கடினமாக உழைக்க வேண்டியது அவசியம் என பலர் நம்புகின்றனர். இருப்பினும் இந்தப் பதிவில் நான் சொல்லப்போகும் விஷயங்களை நீங்கள் கடைப்பிடித்தால், வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்து கொண்டே பணத்தை செலவழித்தும் கூடுதல் செல்வத்தை பெருக்கலாம். 

முதலில் ஒரு தெளிவான நிதி இலக்கை அமைக்கவும். அதாவது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்கள் என்பதை தீர்மானிக்கவும். இது உங்களுக்கு செலவு செய்வது, சேமிப்பது, முக்கியமானவற்றில் கவனம் செலுத்துவது போன்ற விஷயங்களுக்கு உதவும். அதேபோல உங்களது பணத்தை திறம்பட நிர்வகிக்க பட்ஜெட்டை உருவாக்குங்கள். 

உங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை சேமிப்பு, முதலீடு மற்றும் கடனை திருப்பிச் செலுத்துவதற்கு ஒதுக்குங்கள். அதேநேரம் உங்களுக்கு மகிழ்ச்சியை தரும் செயல்பாடுகள் மற்றும் அனுபவங்கள் உள்ளடக்கிய செலவுகளுக்கும் ஒரு பகுதியை ஒதுக்குங்கள். இப்படி ஒரு தெளிவான பட்ஜெட் அமைப்பதன் மூலம் உங்களது எதிர்காலம் பாதிக்காமல் உங்களுக்கு பிடித்த செயல்களில் ஈடுபடலாம். 

அதிகப்படியான தேவையில்லாத பொருட்கள் மற்றும் உடைமைகளை வாங்குவதற்கு பதிலாக, நல்ல அனுபவங்களைப் பெரும் விஷயங்களில் முதலீடு செய்யுங்கள். புதிய இடங்களுக்கு பயணம் செய்வது, புதிய விஷயங்களை முயற்சிப்பது அல்லது சில குறிப்பிட்ட கலாச்சார நிகழ்வுகளில் கலந்து கொள்வது போன்றவற்றிற்கு நேரம் ஒதுக்குங்கள். எந்த பொருளை வாங்குவதற்கு முன்பாகவும் அதன் மதிப்பு என்ன என்பதைக் கணக்கிட்டு, அது உங்களுக்கு உண்மையிலேயே தேவைப்படுகிறதா என்பதை தீர்மானித்து வாங்கவும். 

குறுகிய கால மன நிறைவுக்கு ஆசைப்பட்டு, தேவையில்லாத விஷயங்களுக்கு பணம் செலவழிப்பதை நிறுத்துங்கள். உங்களை மகிழ்விக்கும் விஷயங்கள் விலை உயர்ந்ததாகதான் இருக்க வேண்டும் என்றில்லை. இலவச கோர்ஸ்களை படிப்பது, ஆஃபர்களை பயன்படுத்திக்கொள்வது அல்லது பட்ஜெட்டுக்கு ஏற்ற இடங்களுக்கு பயணம் செய்வது போன்ற மலிவு விலையில் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களை நோக்கிச் செல்லுங்கள். 

நீங்கள் கோடீஸ்வரன் ஆவதற்கு உங்களது பணத்தை சேமிப்பது மற்றும் முதலீடு செய்வதில் ஈடுபடுத்த வேண்டும். இன்றைய டெக் யுகத்தில் உங்களது பணம் தானாக சேமிப்பது மற்றும் முதலீடு செய்யும் விஷயங்களை நீங்கள் தானியங்கிப் படுத்த முடியும். இது தொடக்கத்தில் உங்களுக்கு பலன் அளிக்காதது போல தெரிந்தாலும், படிப்படியாக நீங்கள் செல்வத்தை குவிப்பீர்கள். 

இதையும் படியுங்கள்:
குழந்தைகள் நடக்க Baby Walker பயன்படுத்துவோர் ஜாக்கிரதை!
Rich Guy

பணத்தை புத்திசாலித்தனமாக உருவாக்க பலதரப்பட்ட போர்ட் ஃபோலியோவில் முதலீடு செய்யுங்கள். பங்குகள், பத்திரங்கள், ரியல் எஸ்டேட் மற்றும் பரஸ்பர நிதிகள் போன்ற விருப்பங்களை ஆராய்ந்து அனைத்திலும் பரவலாக முதலீடு செய்யவும். இது நீண்டகால வளர்ச்சிக்கான உத்தரவாதம் அளிக்கிறது. இதனால் ஒரு இடத்தில் நீங்கள் பணத்தை இழந்தாலும் மற்றொரு இடத்தில் அதை மீட்டெடுக்க முடியும். 

இப்பதிவில் நான் குறிப்பிட்டுள்ளது படி, உங்களது வாழ்க்கையை நீங்கள் முறையாக கட்டமைத்தால், ஜாலியாக வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டே பணக்காரன் ஆக முடியும். இன்றே உங்களது நிதி சார்ந்த அறிவை நன்கு வளர்த்துக்கொண்டு, சேமிப்பது மற்றும் முதலீடு சார்ந்த விஷயங்களில் ஈடுபடுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com