கலக்குதே கலர்ஃபுல் கான்டினென்டல் சுவை!

ஓரிகானோ பாஸ்தா
ஓரிகானோ பாஸ்தா

ஓரிகானோ பாஸ்தா

தேவை: பாஸ்தா - 50 கிராம், ஓரிகானோ herbs -10 கிராம், எலுமிச்சைச் சாறு - 10 மில்லி, ஆலிவ் காய் நறுக்கியது -15 கிராம், வெங்காயம் நறுக்கியது 20 கிராம், பூண்டு நறுக்கியது - 10 கிராம், செலரி நறுக்கியது - 15 கிராம், லீக்ஸ் நறுக்கியது -15 கிராம், ஆலிவ் ஆயில் 25 மில்லி, உப்பு, மிளகு - தேவைக்கு.

செய்முறை: பாஸ்தாவை கொதிக்கும் நீரில் எண்ணெய் ஊற்றி 12 நிமிடங்கள் உப்பு, மிளகு சேர்த்து வேகவைத்து எடுக்கவும். ஃபிரையிங் பேனில் எண்ணெய் ஊற்றி வெண்ணெய் சேர்த்து, பிறகு நறுக்கிய வெங்காயம் போடவும். பிறகு, பூண்டு சேர்த்து வதக்கியபின் செலரி இலை போட்டு பிறகு ஓரிகானோ herbs சேர்த்து, வேகவைத்த பாஸ்தாவை போட்டு நன்றாக டோஸ்ட் செய்யவும். பிறகு இறுதியாக ஓரிகானோவை மேலே தூவி பிறகு நறுக்கிய ஆலிவ் காயை தூவி இறக்கவும்.

இது இத்தாலிய உணவாகும். ஓரிகானோ, ஆலிவ், வெங்காயம், பூண்டு, சிலரி லீக்ஸ் ஆகியவைச் சேர்ப்பதால் மூலிகைச் சத்துடன் உடலுக்கு ஆரோக்கிய உணவாகவும் மாறுகிறது.

கோல்ட் ஸ்பானிஷ் சூப்
கோல்ட் ஸ்பானிஷ் சூப்

கோல்ட் ஸ்பானிஷ் சூப்

சூப் வழக்கமாக சூடாக அருந்துவோம். இது வித்தியாசமாகக் குளிர்ச்சியாக இருக்கும்.

தேவை: தக்காளி - 3, வெங்காயம் - 4, வெள்ளரி - 2, துளித்துப் பச்சை - 5, மிளகு + உப்புத் தூள் - தேவைக்கு.

இதையும் படியுங்கள்:
விட்டு விலகி டென்ஷனை போக்குங்கள்!
ஓரிகானோ பாஸ்தா

செய்முறை: தக்காளி, வெங்காயம், வெள்ளரியைப் பொடியாக நறுக்கி மிளகுத் தூள், உப்புத் தூள் சேர்த்து இரவு ஊறவைத்து காலையில் மிக்ஸியில் அடித்துப் பருகலாம்.

பயன்: வயிற்றுப் புண் ஆறும், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் அனைவருக்கும் நல்லது. வெயில் காலத்துக்கு ஏற்ற குளிர்ச்சியான பானம். துளித்துப் பச்சை தூவி பருகினால் நறுமணமாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com