கலப்பட உளுந்து வடையும், பாகற்காய் கடலை கூட்டும்!

recipes...
recipes...Image credit - youtube.com
Published on

ந்த ஒரு சமையலையும் ஒரே மாதிரி செய்தால் சிறிது அலுப்பு தட்டும். அதை கொஞ்சம் மாற்றி வித்தியாசமாக செய்தால் சமைக்கும் நமக்கும் வித்தியாசமாக செய்த திருப்தி கிடைக்கும். சாப்பிடுபவர்களுக்கும் சுவையாக சாப்பிட்ட சந்தோசம் நிலவும். அந்த வகையில் உளுந்துடன் மற்ற சில பொருட்களையும் சேர்த்து செய்யும் கலப்பட வடையைப் பற்றிய செய்முறை இதோ:

கலப்பட வடை:

செய்யத் தேவையான பொருட்கள்:

உளுந்து ஒரு -கப்

ஜவ்வரிசி -இரண்டு கைப்பிடி

சாதம் -ஒரு கைப்பிடி 

சின்ன வெங்காயம்- 10 நறுக்கியது

பச்சை மிளகாய்- 4 நறுக்கியது

கறிவேப்பிலை, தனியா- ஒரு டேபிள் ஸ்பூன் அரிந்தது

மல்லி விதை- சிறிதளவு

உப்பு, எண்ணெய்- தேவைக்கேற்ப

செய்முறை:

உளுந்தை நன்றாக ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும். ஜவ்வரிசியை நன்றாக ஊறவைத்து விடவும். உளுந்து மாவுடன் ஜவ்வரிசி, சாதம், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, தனியா விதை அனைத்தையும் சேர்த்து நன்றாக பிசைந்து கொதிக்கும் எண்ணெயில் வடைகளாகத் தட்டிப்போட்டு பொரித்து எடுக்கவும். இந்த கலப்பட வடை மிகவும் ருசியாகவும், சாப்டாகவும் இருக்கும்.

பாகற்காய் கடலைக் கூட்டு:

தேவையான பொருட்கள்:

பாகற்காய் -கால் கிலோ நறுக்கியது

பெரிய வெங்காயம் -ஒன்று நறுக்கியது

தக்காளி -ஒன்று நறுக்கியது 

மிளகாய்ப் பொடி- ஒரு டேபிள் ஸ்பூன்

மல்லிப்பொடி -சிறிதளவு

மஞ்சள் பொடி -சிறிதளவு

புளிக் கரைசல்- ஒரு டேபிள் ஸ்பூன்

வேர்க்கடலை ஒன்று இரண்டாகப் பொடித்தது -இரண்டு டேபிள் ஸ்பூன் 

உப்பு, எண்ணெய்- தேவைக்கேற்ப

வெல்லத் துருவல் -இரண்டு டீ ஸ்பூன்

இதையும் படியுங்கள்:
நோக்கத்தை விட செயல் முக்கியமானது!
recipes...

செய்முறை:

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து வெங்காயம், தக்காளி வதக்கவும். வதங்கியதும் பாகற்காயைப் போட்டு புரட்டி விட்டு பொடிகளைத் தூவி, உப்புப் போட்டு போதுமான அளவு தண்ணீர்விட்டு நன்றாக வேகவைக்கவும். முக்கால் திட்டம் வெந்த உடன் புளிக்கரை சலை ஊற்றி வேகவிடவும். நன்றாக மசாலாக்கள் சேர்ந்து வந்தவுடன் துருவிய வெல்லத்தை சேர்த்து அடி பிடிக்காமல் கிளறி வேர்க்கடலைப் பொடியைத் தூவி இறக்கி வைக்கவும். கசப்பு தெரியாமல் ருசிக்கும். முள்ளங்கி சாம்பார் உடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com