வித்தியாசமான முறையில் மோர்க் குழம்பு.. டிஸ்கோ டான்ஸ் ஆடும் சுவை நரம்புகள்! 

Mor kulambu recipe in tamil
Mor kulambu recipe in tamil
Published on

நீங்கள் தென்னிந்திய உணவு வகைகளின் ரசிகராக இருந்தால் இந்த பதிவு உங்களுக்கானது. இந்தியாவின் தென் மாநிலங்களில் மிகவும் பிரபலமான உணவான மோர்க் குழம்பை பற்றி நாம் கொஞ்சம் ஆராயப் போகிறோம். அதாவது முற்றிலும் வித்தியாசமான ஒரு மோர்க் குழம்பு ரெசிபியை இந்தப் பதிவில் பார்க்க போகிறோம். சரி வாருங்கள், இந்த அற்புதமான மோர்க் குழம்பை எப்படி செய்வது எனக் கற்றுக் கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

  • 1 கப் தயிர்

  • 1/2 கப் துருவிய தேங்காய்

  • 1 ஸ்பூன் அரிசி மாவு 

  • ½ ஸ்பூன் மஞ்சள் தூள் 

  • ½ ஸ்பூன் கடுகு

  • ½ ஸ்பூன் சீரகம் 

  • 2 காய்ந்த மிளகாய் 

  • சிறிதளவு கருவேப்பிலை 

  • ½ ஸ்பூன் வெந்தயம், 

  • தேவையான அளவு உப்பு 

  • 2 கப் தண்ணீர் 

  • தேவையான அளவு எண்ணெய்

செய்முறை: 

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவலை சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு பேஸ்ட் போல அரைத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். 

பின்னர் ஒரு கிண்ணத்தில் தயிரை சேர்த்து அதில் தண்ணீர் கலந்து நன்றாகக் கலக்கிக் கொள்ளவும்.

அடுத்ததாக ஒரு சிறிய கிண்ணத்தில் அரிசி மாவுடன் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து, பேஸ்ட் போல கலந்து கொள்ளுங்கள். இது மோர்க் குழம்பு கெட்டியாக இருக்க உதவும். 

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, சீரகம், பெருங்காயம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை போன்றவற்றை சேர்த்து வதக்குங்கள்.

இதையும் படியுங்கள்:
திருமண அழைப்பிதழ்களில் உள்ள RSVP-க்கு இதுதான் அர்த்தமா?
Mor kulambu recipe in tamil

இப்போது நெருப்பைக் குறைத்து, அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து, இரண்டு நிமிடங்கள் கிளறி விடுங்கள். இந்த தேங்காய் கலவையிலேயே உப்பு மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக மோரை ஊற்றி கிண்டி விடுங்கள். 

பின்னர் அரிசி மாவு பேஸ்ட்டை சேர்த்து, கலக்கிக் கொண்டே இருந்தால் மோர்க் குழம்பு கெட்டியான பதத்திற்கு மாறும்.

அடுத்ததாக, தனியாக ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, கொஞ்சமாக கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை போட்டு தாளித்ததும், தயார் செய்து வைத்துள்ள மோர் குழம்பை அதில் ஊற்றி நன்கு கலக்கினால், அட்டகாசமான சுவையில் மோர்க் குழம்பு தயார். 

இதை ஒரு முறையாவது முயற்சித்து பாருங்கள் சுவை வேற லெவலில் இருக்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com