கிரிஸ்பியான முருங்கைக் கீரை போண்டா!

முருங்கைக் கீரை போண்டா
முருங்கைக் கீரை போண்டாwww.youtube.com

கடலை மாவு ஒரு கப் 

அரிசி மாவு 2 ஸ்பூன் 

உப்பு சிறிது 

பச்சை மிளகாய் 2

காரப்பொடி 1/2 ஸ்பூன் 

மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்

வெங்காயம் ஒன்று 

முருங்கை இலை 2 கைப்பிடி எண்ணெய் பொரிக்க

முருங்கைக் கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தையும் பொடியாக நறுக்கவும். இப்பொழுது ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு ,காரப்பொடி, மஞ்சள் தூள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், முருங்கை இலை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து சிறிதளவு தண்ணீர் தெளித்து பிசையவும். கடைசியாக ஒரு கரண்டி சூடான எண்ணெய் விட்டு கலந்து எலுமிச்சம் பழ சைஸ் உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும் உருட்டி வைத்த போண்டாக்களை நான்கு நான்காக போட்டு இரண்டு புறமும் சிவக்க பொரித்தெடுக்கவும். தேங்காய் சட்னியுடன் பரிமாற சுவையான சத்தான முருங்கைக்கீரை போண்டா தயார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்பெஷல் தட்டு வடை!

தட்டு வடைனு சொன்னாலே நிறைய பேருக்கு சேலம் தட்டு வடை தான் நியாபகம் வரும். ஆனால் ஸ்ரீவில்லிபுத்தூர் தட்டு வடை என்பது மிகவும் ருசியுடன் ரொம்ப சூப்பராக இருக்கும். ஸ்ரீவில்லிபுத்தூர் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்துக்கு வருவது பால்கோவா தான். ஆனால் இந்த தட்டு வடையும் இங்கு மிகவும் பிரபலமான ஒன்று.

தட்டு வடை
தட்டு வடைwww.youtube.com

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு 2 கப் 

கடலை மாவு ஒரு கப் 

உப்பு தேவையானது 

காரப்பொடி 1ஸ்பூன் 

சீரகம் 1/2 ஸ்பூன் 

சோம்பு ஒரு ஸ்பூன் 

பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன்

வெங்காயம் 2

இஞ்சி ஒரு துண்டு 

பூண்டு 4 பற்கள்

பச்சை மிளகாய் 2

கருவேப்பிலை சிறிது 

கொத்தமல்லி  ஒரு கைப்பிடி

எண்ணெய் பொரிக்க

இதையும் படியுங்கள்:
44 கிலோ எடையை அசால்டாக குறைத்த பெண்.. அதுவும் சாக்லேட், உருளைக்கிழங்கு சாப்பிட்டு!
முருங்கைக் கீரை போண்டா

ரு பாத்திரத்தில் ஒரு குழி கரண்டி அளவு எண்ணெய் விட்டு காரப்பொடி, சீரகம், சோம்பு, உப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து கையால் நன்கு கலக்கி விடவும்.தோல் நீக்கி நசுக்கி வைத்த இஞ்சி, பூண்டு இரண்டையும் சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு கடைசியாக இரண்டு கப் அரிசி மாவு, ஒரு கப் கடலை மாவு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வடை மாவு பதத்திற்கு இல்லாமல் தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் வைத்து எண்ணெய் சூடானதும் கரண்டியால் மாவை எடுத்து எண்ணெயில் விட்டு இரண்டு பக்கமும் மொறுமொறுப்பாக பொன்னிறமாக ஆனதும் எடுத்து விடவும். இதற்கு ஆப்ப சோடா ஏதும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. நன்கு மொறுமொறுப்பாக மிகவும் சுவையான ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்பெஷல் தட்டு வடை தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com