வேர்க்கடலையை அதிகமாக உபயோகிப்பவர்களா நீங்கள்? இந்த வடகத்தை செய்துப் பாருங்கள் அசத்தலாக இருக்கும்.
வேர்க்கடலை வடகம் செய்ய தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு - 3 கிண்ணம்
ஜவ்வரிசி மாவு - 1/2 கிண்ணம்
பச்சை மிளகாய் - 10
வறுத்துப் பொடித்த வேர்க்கடலை பொடி - 1 கிண்ணம்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பச்சை மிளகாயுடன் உப்பை சேர்த்து நன்றாக அரைக்கவும். இந்த விழுதை மாவுகளுடன் சேர்த்து இரண்டு மடங்கு நீரில் கலந்து அடுப்பில் வைத்து கிளறி இறக்கும் சமயத்தில், வறுத்து பொடித்த வேர்க்கடலை மாவை தூவி ,எலுமிச்சைச் சாறு சேர்த்து, நன்றாக ஆறவிட்டு ஓலை பக்கோடா, தேன்குழல், ஓமப்பொடி என்று பிடித்த அச்சில் பிழிந்து எடுக்கலாம். இந்த வடகம் வித்தியாசமான ருசியில் அசத்தும்.
முடக்கத்தான் இலை வடகம்:
தேவையான பொருட்கள் :
சுத்தம் செய்த முடக்கத்தான் இலை - 1 கப்
உளுத்தம் பருப்பு - 1 கப்
பச்சரிசி மாவு - 1/4 கப்
பச்சை மிளகாய் - 10
உப்பு ,பெருங்காயம் - தேவையான அளவு.
செய்முறை:
உளுந்தை நன்றாக ஊற வைத்து கரகரப்பாக அரைத்து வைக்கவும். பச்சை மிளகாயுடன் முடக்கத்தான் இலை, உப்பு மூன்றையும் சேர்த்து நன்றாக விழுதாக அரைத்து மாவு மற்றும் உளுந்தில் போட்டு பெருங்காயம் சேர்க்கவும். பின்னர் மாவை நன்றாக கலந்து சின்ன சின்ன வடைகளாகத் தட்டி காய விடவும். மூட்டு வலி முழங்கால் வலி என்று இருப்பவர்கள் இது போல் செய்து பயன்படுத்தலாம். நல்ல வலி நிவாரணியாக இந்த வடகம் செயல்படும்.