Healthy snacks..!
Multi Grain Sundal..!

புரதச் சத்து நிறைந்த மல்டி கிரைன் சுண்டல்: ஒரு ஆரோக்கிய ஸ்நாக்ஸ்!

Published on

ச்சைப் பயறு கால் கப் 

காராமணி கால் கப் கொண்டைக்கடலை கால் கப் 

பட்டாணி கால் கப் 

கொள்ளு கால் கப் 

வேர்க்கடலை கால் கப்

உப்பு தேவையானது

தனியா ரெண்டு ஸ்பூன்

கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன்

மிளகாய் ரெண்டு 

பெருங்காயம் சிறு துண்டு

கொத்தமல்லி சிறிது

தேங்காய் துருவல் சிறிது 

பயிறு வகைகள் அனைத்தையும் களைந்து தனித் தனியாக முளை கட்டவும். முளை வந்த பருப்புகளை சேர்த்து உப்பு போட்டு குக்கரில் இரண்டு விசில் விட்டு எடுக்கவும்.

வாணலியில் தனியா, கடலைப்பருப்பு, மிளகாய், பெருங்காயத் துண்டு ஆகியவற்றை வறுத்து சிறிது ஆறியதும் கரகரப்பாக பொடித்து வைக்கவும்.

வாணலியில் கடுகு, கருவேப்பிலை தாளித்து வெந்த பயறு வகையை நீரை வடித்து சேர்த்து கிளறவும். அத்துடன் பொடித்து வைத்துள்ள தனியா பொடியையும் சேர்த்து நன்கு கலந்து தேங்காய் துருவல் பொடியா நறுக்கிய கொத்தமல்லி கலந்து விட சத்தான சுண்டல் தயார்.

பச்சைப்பயிறு இனிப்பு சுண்டல்:

பச்சைபயிறு 200 கிராம் 

வெல்லம் 150 கிராம் 

ஏலக்காய் 4 

தேங்காய் துருவல் அரை கப் 

உப்பு ஒரு சிட்டிகை 

இதையும் படியுங்கள்:
விதைகளில் இருந்து விதவிதமான உணவுகள்: பாயசம் முதல் கார போளி வரை!
Healthy snacks..!

பச்சை பயறை இருமுறை நன்கு கழுவி முங்கும் அளவு தண்ணீர் விட்டு குக்கரில் நான்கு விசில் விட்டு எடுக்கவும். வெல்லத்தை பொடித்து வாணலியில் அரை கப் தண்ணீர் விட்டு வெல்லத்தையும் சேர்த்து வெல்லம் கரைந்ததும் வடிகட்டி திரும்பவும்  வாணலியில் விட்டு கொதிக்க விடவும். ஏலக்காயை பொடித்து வைக்கவும்.

வெந்த பச்சை பயறை சிறிது கரண்டியால் மசித்துக்கொண்டு வெல்லக் கரைசலில் சேர்த்து கலந்து கிளறவும். அடுப்பை நிதானமான தீயில் வைத்து கிளறவும். நன்கு சேர்ந்து வரும்போது பொடித்த ஏலக்காய், தேங்காய் துருவல் சேர்த்து இறக்க ருசியான பச்சை பயறு இனிப்பு சுண்டல் ரெடி.

logo
Kalki Online
kalkionline.com