healthy samayal tips
chappathi recipesImage credit - youtube.com

முருங்கை ராகி சப்பாத்தியும், முட்டைக்கோஸ் கூட்டும்!

Published on

முருங்கை ராகி சப்பாத்தி செய்ய தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு- ஒரு கப்

ராகி மாவு -ஒரு கப்

முருங்கைக் கீரை பொடியாக அரிந்தது- ஒரு கப்

சின்ன வெங்காயம் பொடியாக அரிந்தது -கைப்பிடி

சிறிதளவு -சீரகப்பொடி

தேவையான அளவு- எண்ணெய், உப்பு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் மாவு இரண்டையும் சேர்த்து தேவையான அளவு உப்பு போடவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய்விட்டு வெங்காயம் தாளித்து பொடியாக அரிந்த கீரையும் அதனுடன் சேர்த்து வதக்கி சீரக பொடி கலந்து மாவில் சேர்க்கவும். தேவையான அளவு மாவில் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி பதத்திற்கு மாவை உருட்டி வைக்கவும். பின்னர் பூரி கட்டையில் தேய்த்து தவாவில் சப்பாத்திகளாக இட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு சப்பாத்திகளாக சுட்டு எடுத்து வைக்கவும். கமகம நெடியில் ,சுவையும், சத்தும் நிறைந்த ராகி கீரை சப்பாத்தி ரெடி. மூங் தால் மற்றும் எந்த காய்கறி கூட்டோடு சேர்த்து சாப்பிட்டாலும் சுவை அள்ளும்.

முட்டைக்கோஸ் கூட்டு:

செய்ய தேவையான பொருட்கள்:

முட்டைகோஸ் பொடியாக அரிந்தது- ஒரு கப்

கேரட், பீன்ஸ் பொடியாக நறுக்கியது -ஒரு கப்

வேர்க்கடலை -ஒரு டேபிள் ஸ்பூன்

பச்சைப்பட்டாணி -ஒரு டேபிள் ஸ்பூன்

கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு- தாளிப்பதற்கு

தேவையான அளவு 

பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்- ஒன்று 

பொடியாக நறுக்கிய தக்காளி- ஒன்று 

பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, தனியா- ஒரு டேபிள் ஸ்பூன் 

துருவி பொடித்த தேங்காய்த் துருவல் -ரெண்டு டேபிள் ஸ்பூன்

சாம்பார் பொடி -ஒரு டேபிள் ஸ்பூன்

எண்ணெய், உப்பு தேவையான அளவு. 

இதையும் படியுங்கள்:
பாரம்பரிய தேங்காய்ப் பால் ஜவ்வரிசி உருண்டை!
healthy samayal tips

செய்முறை:

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து, வேர்க்கடலை பச்சை பட்டாணியை போட்டு வறுக்கவும். பிறகு வெங்காயம் தக்காளி வதக்கி அரிந்து வைத்த காய்கறிகளை சேர்த்து நன்றாக கிளறி சாம்பார் பொடியை அதன் மீது போட்டு, உப்பு கலந்து தேங்காய் துருவலையும் சேர்த்து மிதமான தீயில் அவ்வப்பொழுது புரட்டி விட்டு வேகவைத்து, கருவேப்பிலை தனியாவை சேர்த்து கம கம வாசனை வந்து வெந்தவுடன் எடுத்து வைக்கவும்.

இந்த முட்டைக்கோஸ் கூட்டு சப்பாத்தியிலிருந்து அனைத்திற்கும் நல்ல ஜோடி சேரும். வித்தியாசமான ருசியில் அசத்தலாக இருக்கும். சிறிதளவு இஞ்சி சேர்த்து வதக்கினால் கோஸின் வாசனை மட்டுப்படும். ருசியையும் கூட்டிக் கொடுக்கும்.

logo
Kalki Online
kalkionline.com