

காளான் (Mushroom), கறிவேப்பிலை உலர் ஃபிரை (Dry Fry) ரெசிபி.
தேவையான பொருட்கள்:
1.மஷ்ரூம் 500 கிராம்
2.வெங்காயம் 2
3.பச்சை மிளகாய் 2
4.இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 டேபிள் ஸ்பூன்
5.ஃபிரஷ் கறிவேப்பிலை இலைகள் 200 கிராம்
6.மஞ்சள் தூள் ¼ டீஸ்பூன்
7.எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்
8.உப்பு தேவையான அளவு
9.கொத்தமல்லி விதைகள் 1½ டேபிள் ஸ்பூன்
10.பெருஞ்சீரகம் 1 டீஸ்பூன்
11.கருப்பு மிளகு 1 டீஸ்பூன்
12.காய்ந்த சிவப்பு மிளகாய் 6
13.வெள்ளை எள் ½ டேபிள் ஸ்பூன்
செய்முறை:
கொத்தமல்லி விதைகள், பெருஞ்சீரகம், மிளகு, சிவப்பு மிளகாய் மற்றும் எள் ஆகியவற்றை ஒரு வாணலியில் போட்டு கோல்டன் கலரில் சிவந்து, மணம் வரும் வரை வறுத்தெடுக்கவும். பின் 180 கிராம் கறிவேப்பிலை இலைகளை அதே வாணலியில் போட்டு
ஈரப்பசை நீங்கி கிரிஸ்பியாக வரும் வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும். வறுத்த பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
காளான்களை சுத்தப்படுத்தி, கழுவி, தண்டுடன் சேர்த்து நீளவாக்கில் 2-3 துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். வெங்காயத்தை பொடிசா நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய்களை கீறி வைத்துக்கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, மீதமுள்ள இருபது கிராம் கறிவேப்பிலைகளையும் போடவும். பின் நறுக்கி வைத்துள்ள காளான் துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் கிளறிவிடவும்.
தேவையான அளவு உப்பு சேர்க்கவும். காளான்கள் வெந்து நீர்ச்சத்து குறைந்ததும் அரைத்து வைத்துள்ள மசாலாப் பவுடரை சேர்த்துக் கலந்து வதக்கவும். மொத்த கலவையும் உலர் ஃபிரை பதத்திற்கு வந்ததும் இறக்கிவிடவும். சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சுவையான மஷ்ரூம் கறிவேப்பிலை ட்ரை ஃபிரை ரெடி.