சிப்பி காளான் குழம்பு சாப்பிட்டு இருக்கீங்களா மக்களே?

Mushroom Kuzhambu
Mushroom Kuzhambu
Published on

இன்னைக்கு நம்ம கிச்சன்ல ஒரு சூப்பரான, சைவம் சாப்பிடுறவங்களுக்கு ரொம்ப புடிச்ச சிப்பி காளான் குழம்பு எப்படி செய்யுறதுன்னு பார்க்க போறோம். மட்டன் குழம்பு, சிக்கன் குழம்புனு இல்லாம இந்த காளான் குழம்பு ஒரு தடவை செஞ்சு பாருங்க, கண்டிப்பா உங்களுக்கு ரொம்ப பிடிக்கும். சாதத்தோட பிசைஞ்சு சாப்பிடறதுக்கு அவ்வளவு அட்டகாசமா இருக்கும். வாங்க, இந்த சுவையான சிப்பி காளான் குழம்பை எப்படி ஈஸியா செய்யுறதுன்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • சிப்பி காளான் - 200 கிராம்

  • சின்ன வெங்காயம் - 10-12 

  • தக்காளி - 1 

  • பூண்டு பற்கள் - 6-7 

  • புளி - ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு

  • தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்

  • குழம்பு மிளகாய் தூள் - 1.5 டேபிள் ஸ்பூன்

  • மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

  • கடுகு - அரை டீஸ்பூன்

  • வெந்தயம் - கால் டீஸ்பூன்

  • சீரகம் - அரை டீஸ்பூன்

  • கறிவேப்பிலை - ஒரு கொத்து

  • நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

  • உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதல்ல காளானை நல்லா தண்ணியில அலசி சுத்தம் பண்ணி சின்ன சின்ன துண்டுகளா நறுக்கி வச்சுக்கோங்க. அதுக்கப்புறம் அடுப்புல ஒரு கடாய வச்சு நல்லெண்ணெய் ஊத்துங்க. எண்ணெய் சூடானதும் கடுகு, வெந்தயம், சீரகம் போட்டு பொரிய விடுங்க. கூடவே கறிவேப்பிலையும் போடுங்க.

அடுத்ததா நறுக்கின சின்ன வெங்காயம், தட்டிய பூண்டு போட்டு நல்லா வதக்குங்க. வெங்காயம் கொஞ்சம் பொன்னிறமா வந்ததும் நறுக்கின தக்காளியை சேர்த்து நல்லா மசியற வரைக்கும் வதக்குங்க.

தக்காளி நல்லா வதங்கினதும், மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் தூள் போட்டு ஒரு நிமிஷம் பச்சை வாசனை போற வரைக்கும் வதக்குங்க. அடுப்பை சிம்ல வச்சுக்கோங்க இல்லன்னா மசாலா கரிஞ்சிடும்.

இப்போ கரைச்சு வச்ச புளியை ஊத்தி, தேவையான அளவு உப்பு சேருங்க. குழம்பு ஒரு கொதி வந்ததும், நறுக்கி வச்ச காளான் துண்டுகளை அதுல போடுங்க. காளான் சீக்கிரம் வெந்துடும்.

இதையும் படியுங்கள்:
சூடான உணவை சாப்பிடுவதால் ஏற்படும் 5 முக்கிய உடல் நலப் பிரச்னைகள்!
Mushroom Kuzhambu

குழம்பு நல்லா கொதிச்சு, காளான் வெந்ததும் (ஒரு 5-7 நிமிஷம் ஆகும்), நீங்க தேங்காய் விழுது சேர்க்கிறதா இருந்தா இப்போ சேர்த்து நல்லா கலந்து விடுங்க. தேங்காய் சேர்த்த பிறகு ஒரு ரெண்டு நிமிஷம் கொதிக்க விட்டு அடுப்பை அணைச்சிடுங்க. ரொம்ப நேரம் கொதிக்க விட வேணாம்.

சூடான சுவையான சிப்பி காளான் குழம்பு ரெடி‌. இது சூடான சாதத்தோடையும், இட்லி, தோசையோடயும் சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும். செய்யறதும் ரொம்ப ஈஸிதான். கண்டிப்பா நீங்களும் உங்க வீட்ல இந்த குழம்பை செஞ்சு பார்த்துட்டு எப்படி இருந்துச்சுன்னு சொல்லுங்க. இந்த டேஸ்ட் உங்களுக்கு ரொம்ப புடிக்கும்னு நம்புறேன்.

இதையும் படியுங்கள்:
தொற்று நோய்களுக்கான மருந்துப் பொருளாகும் காளான்..!
Mushroom Kuzhambu

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com