Nachnu nanguvagai healthy thuvayal recipes!
thuvayal recipes

நச்சுனு நாவூரவைக்கும் நான்கு வகை துவையல்!

Published on

வல்லாரைத் துவையல்

தேவை:

பொடியாக நறுக்கிய வல்லாரை - 1 கப்

வர மிளகாய் - 4

புளி - கோலிகுண்ட அளவு

நறுக்கிய வெங்காயம் - 1

உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

கடுகு உளுந்தம் பருப்பு - தாளிக்க

செய்முறை:

வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு, வர மிளகாய், வெங்காயம், புளி, வல்லாரை கீரையை போட்டு வதக்கி, உப்பு சேர்த்து அரைக்கவும். ஒரு கரண்டியில் எண்ணெய்விட்டு, கடுகு, உளுந்தம் பருப்பு தாளிக்கவும். சுவையான, சத்தான வல்லாரைக் கீரை துவையல் தயார்.

தூதுவளை துவையல்

தேவை:

நறுக்கிய தூதுவளைக் கீரை - 1 கப்

நறுக்கிய வெங்காயம் - 1

வர மிளகாய் - 2

புளி - கோலிகுண்டு அளவு

உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.

கடுகு உளுந்தம் பருப்பு - தாளிக்க

செய்முறை:

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, மிளகாய். புளி, நறுக்கிய வெங்காயம், தூதுவளையை போட்டு வதக்கி, உப்பு சேர்த்து அரைக்கவும். கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து துவையலில் சேர்க்கவும். இதற்கு தேங்காய் தேவை இல்லை. நெஞ்சு சளி உள்ளவர்களுக்கு ஏற்ற துவையல் இது.

இதையும் படியுங்கள்:
சுவை அள்ளும், நாக்கு துள்ளும் ‘தேங்காய் பால் புலாவ்’ செய்முறை! 
Nachnu nanguvagai healthy thuvayal recipes!

அரைக்கீரை துவையல்

தேவை:

நறுக்கிய அரைக் கீரை - 1 கப்

வர மிளகாய் - 3

புளி - கோலிகுண்டு அளவு

உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.

உளுந்தம் பருப்பு - அரை கப்

கடுகு - தாளிக்க

செய்முறை:

அரைக்கீரையை வேகவைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, வர மிளகாய், உளுந்தம் பருப்பு, புளி போட்டு வதக்கவும். வெந்த அரைக்கீரையை நீரை வடித்து விட்டு, இதனுடன் சேர்த்து, உப்பு கலந்து அரைக்கவும். கடுகு தாளித்து சேர்க்கவும். சுவையான அரைக்கீரை துவையல் தயார். சாதத்தில் பிசைந்து சாப்பிட ஜோராக இருக்கும்.

வாழைக்காய் துவையல்

தேவை:

தேங்காய் துருவல் - 4 ஸ்பூன்

வாழைக்காய் - 2

பச்சை மிளகாய் - 2

எலுமிச்சை சாறு - 3 ஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.

கடுகு, உளுந்தம் பருப்பு - தாளிக்க

செய்முறை:

வாழைக்காயை இரண்டாக நறுக்கி, வேகவைத்து, முக்கால் வேக்காட்டில் எடுத்து, தோல் நீக்கவும். அதனுடன் உப்பு, பச்சை மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து, எலுமிச்சைசாறு சேர்க்கவும். இதனுடன் கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து சேர்க்கவும். வித்தியாசமான சுவை கொண்ட துவையல் இது.

logo
Kalki Online
kalkionline.com