நரசிம்மருக்கு மிகவும் பிடித்த பானகம்...செய்யலாம் வாங்க!

Paanagam Drink
Lord Narasimha's Favourite Drink PaanagamImage Credits: Red Chilly Curry
Published on

ரசிம்மரை வழிபடும்பொழுது நோய், கடன், திருஷ்டி ஆகியவை தீரும். எப்படி நரசிம்ம அவதாரத்தை நொடி பொழுதில் எடுத்தாரோ அதேபோல நொடி பொழுதில் பிரச்னைகளைத் தீர்க்க கூடியவர். அதனால் அவருக்கு பிடித்த பானகத்தை வைத்து வழிபடும்போது இன்னும் சிறப்பாக இருக்கும். பானகம், பஞ்சாமிர்தம், இளநீர் போன்றவற்றை மாலை நேரமாக வைத்து படைப்பது சிறப்பு. நரசிம்மருக்கு பிடித்த செம்பருத்தி, அரளிப் பூவை வைத்து படைக்கலாம். அவர் படத்திற்கு சந்தனம், குங்குமம் வைத்து நரசிம்ம மந்திரத்தை சொல்லி வழிப்படுவது நல்லது.

பானகம் செய்ய தேவையான பொருட்கள்:

வெல்லம்- தேவையான அளவு.

புளி- நெல்லிக்காய் அளவு.

எழுமிச்சை பழம்-2

ஏலக்காய் பொடி-1 தேக்கரண்டி.

சுக்குப்பொடி-1 தேக்கரண்டி.

பச்சை கற்பூரம்-1 சிட்டிகை.

துளசி-தேவையான அளவு.

உப்பு-1 சிட்டிகை

பானகம் செய்முறை விளக்கம்:

முதலில் வெல்லத்தை நன்றாக துருவி எடுத்துக் கொள்ளவும். இதை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு கொள்ளவும். இதில் வெல்லம் நனையும் அளவு தண்ணீர் சேர்க்கவும். இப்போது வெல்லத்தை நன்றாக கரைத்து விடவும்.

இப்போது அதில் எழுமிச்சை பழம் 2 பிழிந்து கொள்ளவும். புளியை கரைத்து வைத்திருந்த புளி தண்ணீரையும் இத்துடன் விட வேண்டும். அடுத்து இத்துடன் சுக்கு பொடி, ஏலக்காய் பொடி சேர்த்து கொள்ளவும். இதில் ஒரு சிட்டிகை உப்பு, 1 சிட்டிகை பச்சை கற்பூரம் சேர்த்து கொள்ளவும்.

இப்போது பானகத்தை வேறு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்து கொள்ளவும். இதில் பிளேவருக்கு துளசி இலைகளை மேலே தூவி பரிமாறவும்.

பஞ்சாமிர்தம் செய்ய தேவையான பொருட்கள்:

வாழைப்பழம்-5

நாட்டு சக்கரை-1கப்.

உலர்ந்த திராட்சை-10

பேரிச்சம்பழம்-10

கற்கண்டு-1 கப்.

ஏலக்காய் தூள்-2 தேக்கரண்டி.

கருப்பு உலர்ந்த திராட்சை-10

பச்சை கற்பூரம்-1 சிட்டிகை.

தேன்-3 தேக்கரண்டி.

நெய்-1தேக்கரண்டி.

இதையும் படியுங்கள்:
நிலக்கடலை சேவு மற்றும் சேமியா அடை செய்யலாம் வாங்க!
Paanagam Drink

பஞ்சாமிர்தம் செய்முறை விளக்கம்:

முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் 5 வாழைப்பழத்தை உரித்து எடுத்து கொண்டு அதை நன்றாக மசிக்கவும். இப்போது நன்றாக மசித்த வாழைப்பழத்துடன் நாட்டு சர்க்கரை 1 கப் சேர்த்து கொள்ளவும். இத்துடன் உலர்ந்த திராட்சை 10, பேரிச்சம்பழம் கொட்டையை நீக்கியது 10, கற்கண்டு 1 கப், ஏலக்காய்த்தூள் 2 தேக்கரண்டி, கருப்பு உலர்ந்த திராட்சை, பச்சை கற்பூரம் 1சிட்டிகை. இத்துடன் தேன் 3 தேக்கரண்டி, நெய் 1 தேக்கரண்டி சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கலந்து விடவும். இப்போது கோவில் பிரசாதமான பஞ்சாமிர்தம் தயார். இந்த நரசிம்மர் ஜெயந்தியில் இந்த பிரசாதங்களை செய்து நரசிம்மருக்கு படைத்து வாழ்வில்  நன்மைகளை பெறுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com