அடுப்பே இல்லாமல் வடை செய்யலாம் வாங்க!

No Boil No Oil Vadai Recipe.
No Boil No Oil Vadai Recipe.

கடந்த சில மாதங்களாகவே, அடுப்பின்றி எண்ணெயின்றி சமைக்கும், No Boil No Oil உணவுகள் பிரபலமடைந்து வருகிறது. இது சமைப்பதற்கு எளிதாகவும் உடலுக்கு சத்து மிகுந்ததாகவும் இருப்பதால், பெரும்பாலான நபர்கள் இத்தகைய உணவுகளை செய்ய விரும்புகின்றனர். சரி வாருங்கள் இந்த பதிவில் No Boil No Oil வடை எப்படி செய்வது எனப் பார்க்கலாம். 

பொதுவாகவே சைவ உணவுகள் என்றாலே அதில் வடை பிரதான உணவாகும். வடை என்றாலே அதை எண்ணெயில் பொரித்துதான் செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. ஆனால் நோ பாயில் நோ ஆயில் முறையிலும் வடையை நாம் செய்ய முடியும். 

தேவையான பொருட்கள்: 

முருங்கைக்கீரை - ஒரு கைப்பிடி

மிளகுத்தூள் - 1 ஸ்பூன்

சீரகத்தூள் - 1 ஸ்பூன் 

வேர்க்கடலை - பொடி செய்வது 2 ஸ்பூன்

சோம்பு - 1 ஸ்பூன் 

தேங்காய்த் துருவல் - ஒரு கைப்பிடி

உப்பு - தேவையான அளவு

செய்முறை

முதலில் முருங்கைக் கீரையையும், தேங்காய்த் துருவாலையும் ஒன்றாக சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். நீங்கள் பிசையும் போது, தேங்காய்த் துருவலில் உள்ள எண்ணெய் வெளியே வரும்படி பிசைய வேண்டும். 

இதையும் படியுங்கள்:
இந்திய மசாலா பொருட்களின் பலன்கள்!
No Boil No Oil Vadai Recipe.

அதன் பின்னர் எல்லா மசாலா பொருட்களையும் சேர்த்து, ஐந்து நிமிடத்திற்கு நன்றாக பிசைந்து கொண்டே இருங்கள். 

இறுதியாக பிசைந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, உள்ளங்கையில் வைத்து தட்டையாக்கினால், நெருப்பின்றி எண்ணெயின்றி வடை தயார். 

இதை சிறிது நேரம் அப்படியே உலர விட்டு சாப்பிட்டால், சுவை சூப்பராக இருக்கும். இந்த ரெசிபி செய்வதற்கு ஐந்து நிமிடமே போதும். எவ்வித கஷ்டமும் இன்றி உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு எளிதாக செய்து கொடுக்கலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com