

சமையலுக்குத் தேவையான சில பொருட்களை முன்பே தயாரித்து வைத்துக்கொள்வது காலையில் அவரசமாக கிளம்பும் நேரத்தில் வேலைகளை சுலபமாக முடிக்க நமக்கு கைக்கொடுக்கும். இதனால் ஸ்ட்ரெஸ் இல்லாமல் ஜாலியாக சமைக்கலாம். அப்படி என்னவெல்லாம் செய்யலாம் (Cooking tips) என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் உணவுகள் தரும் போது புரதத்திற்காக பனீர் தரும் பழக்கம் நிறைய தாய்மார்களுக்கு உண்டு. கிரேவி, பரோட்டா போன்றவற்றில் பனீரை பயன்படுத்தி கொடுத்து விடுவோம். தற்போது போலி பனீரை பற்றிய செய்திகள் நிறைய வருகிறது. இது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பதாக உள்ளது. இதனால் பனீரை கடையில் வாங்காமல் வீட்டிலேயே சிம்பிளாக செய்யலாம்.
அதற்கு முதலில் ஒரு லிட்டர் பாலை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும். பால் நன்றாக சூடாகி பொங்க போகும் சமயம் நமக்கு தேவையான மசாலாக்களை சேர்த்துக் கொள்ளலாம்.
மிளகுத்தூள், உப்பு, சீரகம், சில்லி பிளேக்ஸ் ஆகியவை 1 தேக்கரண்டி சேர்த்து அத்துடன் கொத்தமல்லி இலை சிறிதளவு, இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து 2 நிமிடம் கழித்து பார்த்தால் பனீர் பிரிந்து வந்திருக்கும். அதை துணியில் ஊற்றி வடிகட்டிவிட்டு எடுத்தால் சுவையான பனீர் தயார். இதை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
குழந்தைகள் லஞ்ச் பாக்ஸில் சாப்பிடக் கேட்பது பாஸ்தா, நூடுல்ஸ் போன்ற உணவுகள்தான். இதை எப்படி வீட்டிலேயே ஆரோக்கியமாக செய்யலாம் என்று பார்க்கலாம். Schezwan sauce எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
முதலில் ஃபேனில் 1 1/2 கப் தண்ணீர் விட்டு சூடு பண்ணிக் கொள்ளலாம். அதில் 8 காரமான காய்ந்த மிளகாய், 8 காஷ்மீரி மிளகாய், 3 தக்காளி சேர்த்து மூடி வைத்து 10 நிமிடம் வேகவைக்கவும். பிறகு தண்ணீரை வடிகட்டி விட்டு மிக்ஸியில் பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும்.
இப்போது அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய பூண்டு 10, இஞ்சி 4 துண்டு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இதில் தயாரித்து வைத்திருக்கும் பேஸ்ட்டை சேர்த்து தேவையான அளவு உப்பு, 1 தேக்கரண்டி சர்க்கரை, வினிகர் 1தேக்கரண்டி சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் பிரிந்து வரும்வரை கொதிக்கவிட்டு எடுத்தால் Schezwan Sauce தயார்.
இந்த சாஸ் வைத்து Schezwan fried rice எப்படி செய்வது என்று பார்ப்போம். ஒரு அகலான பாத்திரத்தில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு 1 தேக்கரண்டி சேர்த்து வதக்கிவிட்டு இதில் பொடியாக நறுக்கிய 1 வெங்காயம், 1 குடைமிளகாய் சேர்த்து வதக்கிவிட்டு கேரட், பீன்ஸ், ஸ்வீட்கார்ன், முட்டைக்கோஸ் அனைத்திலும் 1 கப் சேர்த்து வதக்கி உப்பு 1 தேக்கரண்டி சேர்த்து வதக்கி விடுங்கள். இப்போது ரெடி பண்ணி வைத்திருக்கும் Schezwan sauceஐ 1 1/2 தேக்கரண்டி சேர்த்து சாதம் 1 கப், மிளகுத்தூள் 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக கிளறிவிடவும். அவ்வளவுதான் சுவையான Schezwan fried rice தயார்.
இதுப்போல சில பொருட்களை முன்பே நாம் தயாரித்து வைத்துக் கொள்வது காலையில் குழந்தைகளுக்கு உணவு தயாரித்துக் கொடுக்க வசதியாக இருக்கும். நீங்களும் முயற்சித்துப்பாருங்கள்.