வீட்டிலேயே சுவையான 'நூடுல்ஸ் மசாலா' செய்வது எப்படி?

Noodles Masala Recipe.
Noodles Masala Recipe.

நூடுல்ஸ் மசாலா அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சுவையான உணவாகும். இதை தயாரிப்பது மிகவும் எளிது மற்றும் சுவையும் வேற லெவலில் இருக்கும். நீங்கள், வீட்டில் இருப்பவர்களுக்கு விரைவாக ஏதேனும் செய்து கொடுக்க விரும்பினால் இந்த நூடுல்ஸ் மசாலாவை முயற்சிக்கலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இதை விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாருங்கள், இந்தப் பதிவில் வீட்டிலேயே சுவையான நூடுல்ஸ் மசாலா எப்படி செய்வது என்பதை பார்ப்போம். 

தேவையான பொருட்கள்:

 • நூடுல்ஸ் - 200 கிராம்

 • காய்கறிகள் - வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ் (உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப)

 • எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

 • கடுகு - 1/2 டீஸ்பூன்

 • உளுந்து - 1/2 டீஸ்பூன்

 • பெருஞ்சீரகம் - 1/2 டீஸ்பூன்

 • கறிவேப்பிலை - 1 தண்டு

 • மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

 • மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

 • தனியா தூள் - 1 டீஸ்பூன்

 • உப்பு - தேவையான அளவு

 • சோயா சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்

 • தக்காளி சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்

 • வினிகர் - 1 டேபிள் ஸ்பூன்

 • காய்கறி சூப் பவுடர் - 1 டீஸ்பூன்

 • கொத்தமல்லி தழை - அலங்கரிக்க

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும் அதில் உப்பு மற்றும் நூடுல்ஸ் சேர்த்து வேக வைக்கவும். நூடுல்ஸ் நன்றாக வெந்ததும் தண்ணீரை வடித்து குளிர்ந்த நீரில் அதை அலசி தனியாக வைத்துக் கொள்ளுங்கள். 

இப்போது ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்து, பெருஞ்சீரகம் போட்டு தாளிக்கவும். பின்னர் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கங்கள். வெங்காயம் வதங்கியதும் தக்காளி மற்றும் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து நன்றாக வதக்கவும். 

காய்கறிகள் வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் உப்பு சேர்த்து கலக்குங்கள். இப்போது சோயா சாஸ், தக்காளி சாஸ், வினிகர், காய்கறி சூப் பவுடர் போன்றவற்றை சேர்த்து நன்கு கிளறி, வேகவைத்த நூடுல்ஸ் சேர்த்து மிதமான சூட்டில் நன்றாகக் கிளறி விடவும். 

இதையும் படியுங்கள்:
Mukbang என்றால் என்ன? சோறு தின்னே சம்பாதிக்கிறாங்களே!
Noodles Masala Recipe.

இறுதியில் கொத்தமல்லி தழை தூவி அலங்கரித்தால் சூப்பரான சுவையில் நூடுல்ஸ் மசாலா தயார். இந்த செய்முறையைப் பின்பற்றி நீங்களும் இந்த ரெசிபியை செய்து வீட்டில் அசத்துங்கள். இதில் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். நூடுல்சை வேகவைக்கும் போது அதிகப்படியான தண்ணீர் சேர்க்கக்கூடாது.  அதேபோல மசாலாவையும் அதிகம் சேர்க்காமல் உங்களது சுவைக்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளுங்கள். நூடுல்ஸ் மசாலாவை சூடாக சாப்பிடுவது நன்றாக இருக்கும். எனவே செய்து முடித்ததும் உடனடியாக பரிமாறத் தொடங்கிவிடுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com