Mukbang என்றால் என்ன? சோறு தின்னே சம்பாதிக்கிறாங்களே!

Mukbang
Mukbang
Published on

சமீபத்திய ஆண்டுகளில் Mukbang இணையத்தில் பிரபலமடைந்து வருகிறது. குறிப்பாக, YouTube போன்ற தளங்களில். Mukbang என்பது அதிக அளவிலான உணவை ஒரே மொத்தமாக சாப்பிடுவதை பதிவு செய்வதாகும். அதை சிலர் நேரடி ஒளிபரப்பில் தங்களின் பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். இந்தப் பதிவில் Mukbang என்றால் என்ன அது எவ்வாறு தோன்றியது மற்றும் Mukbangers எவ்வாறு பணம் ஈட்டுகிறார்கள் என்பது பற்றி முழுமையாகப் பார்க்கலாம். 

Mukbang என்றால் என்ன?

Mukbang என்பது "Mukja" (먹자, "உண்ணுங்கள்") மற்றும் "bangsang" (방송, "ஒளிபரப்பு") என்ற கொரிய வார்த்தைகளின் கலவையாகும். இது ஒரு நபர் அதிக அளவிலான உணவு உண்பதை பதிவு செய்து YouTube போன்ற சமூக வலைதளங்களில் நேரலையிலோ அல்லது வீடியோவாகவோ பகிர்வதாகும். இது பெரும்பாலும் YouTube, Twitch, AfreecaTV போன்ற ஸ்ட்ரீமிங் தளங்களில் காணப்படுகின்றன.

Mukbang எவ்வாறு தோன்றின?

Mukbang 2010 களின் முற்பகுதியில் தென் கொரியாவில் தோன்றியது. தனிமையானவர்கள் மற்றும் சமூக தொடர்புகளை விரும்புபவர்கள், தங்கள் உணவு அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு வழியாக இது தொடங்கியது. படிப்படியாக, Mukbang பிரபலமடைந்து, உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களைக் கவர்ந்தது.

Mukbangers எப்படி பணம் சம்பாதிக்கிறார்கள்? 

  • யூட்யூபில் பார்வையாளர்கள் தங்கள் விருப்பமான Mukbangers-களுக்கு நேரடியாக பணம் அனுப்பலாம். மேலும் நேரலையில் ‘Super Chat’ அம்சங்கள் வாயிலாக கருத்துப் பகுதியில் பார்வையாளர்கள் பணம் செலுத்தலாம். 

  • சில முக்பேங்கர்கள் தங்கள் சேனல்களுக்கு சந்தாதாரர் சேவையை எனேபிள் செய்கின்றனர். இதில் சந்தாதாரர்கள் பணம் செலுத்தி சேர்வதால், அவர்களுக்கென்று பிரத்தியேக உள்ளடக்கம், ஸ்ட்ரீமிங் மற்றும் நேரடி தொடர்பு போன்ற சலுகைகள் வழங்கப்படுகிறது. 

Mukbangers
Mukbangers
  • YouTube சேனல்களில் அவர்கள் பதிவிடும் வீடியோக்களில் வரும் விளம்பரங்கள் வாயிலாகவும் குறிப்பிட்ட பணத்தைப் பெறுகின்றனர். மேலும் சில முக்பேங்கர்கள் மற்ற நிறுவனங்களின் உணவு, பானங்கள் அல்லது பிற தயாரிப்புகளை தாங்களாகவே விளம்பரப்படுத்தி பணம் சம்பாதிக்கின்றனர். இதில் சிலர் தங்களுக்கு என சொந்தமாக புத்தகங்கள், உணவுப் பொருட்கள் அல்லது ஆடைகளை வடிவமைத்து அவர்களது சொந்த பிராண்டை விரிவுபடுத்துகின்றனர். 

  • ஒரு சில பிரபலமான முக்பேங்கர்கள் தங்கள் ரசிகர்களுடன் நேரடி தொடர்புகொள்ள நிகழ்ச்சிகள் நடத்தி, அதில் டிக்கெட் விற்பனை, சந்திப்பு மற்றும் விளம்பரப்படுத்தப்பட்ட தயாரிப்புகளை விற்பனை செய்து பணம் ஈட்டுகிறார்கள். 

Mukbangers எவ்வளவு பணம் சம்பாதிக்கிறார்கள் என்பது பல்வேறு காரணிகளைப் பொறுத்தது, அவற்றில் பார்வையாளர்களின் எண்ணிக்கை, ஈடுபாடு விகிதம், உள்ளடக்கத்தின் தரம், அவர்கள் பயன்படுத்தும் பணமாக்குதல் முறைகள் மற்றும் அவர்களின் பிராண்டின் பிரபலம் ஆகியவை அடங்கும். சில Mukbangers முழுநேர வருமானத்தை ஈட்டுகிறார்கள், மற்றவர்கள் இதை ஒரு கூடுதல் வருமானமாக மட்டுமே பார்க்கிறார்கள். 

இதையும் படியுங்கள்:
ஜவ்வரிசி வடை: ஒரு சுவையான, மொறுமொறுப்பான சிற்றுண்டி செய்முறை! 
Mukbang

இதுபோன்ற வீடியோக்களை பார்க்கும்போது எப்படித்தான் இவ்வளவு சாப்பிடுகிறார்களோ என்றுதான் தோன்றும். யாருக்கு தெரியும்? இது அவர்களின் எடிட்டிங் தந்திரமாகக் கூட இருக்கலாம். இவர்களெல்லாம் சோறு தின்றே கோடிக்கணக்கில் சம்பாதிப்பதை பார்க்கும்போது கொஞ்சம் பொறாமையாகத்தான் இருக்கிறது. எது என்னவோ, அவர்கள் தங்களின் உடல்நலத்தை கெடுத்துக் கொள்ளாமல் இருந்தால் சரி. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com