வட இந்தியா ஸ்பெஷல் ‘பன்னீர் குர்ச்சான்’ செய்முறை! 

North India Special 'Panneer Kurchan' recipe!
North India Special 'Panneer Kurchan' recipe!
Published on

Paneer Khurchan என்பது வட இந்தியாவில் பிரபலமான ஒரு பன்னீர் ரெசிபியாகும். இது பன்னீர், வெங்காயம், தக்காளி மற்றும் மசாலா பொருட்கள் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. இது சாதம், ரொட்டி மற்றும் பூரிக்கு சாப்பிட சூப்பர் சுவையில் இருக்கும். இந்தப் பதிவில் வீட்டிலேயே எளிதாக பன்னீர் குர்ச்சான் செய்வதற்கான வழிமுறைகளைப் பார்ப்போம். 

தேவையான பொருட்கள்:

  • 250 கிராம் பன்னீர் (சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்டது)

  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

  • 1 பெரிய வெங்காயம் (நறுக்கியது)

  • 2 பச்சை மிளகாய் (நறுக்கியது)

  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

  • 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்

  • 1 தேக்கரண்டி மிளகாய் தூள்

  • 1/2 தேக்கரண்டி கரம் மசாலா

  • 1/2 தேக்கரண்டி தனியா தூள்

  • 1/4 தேக்கரண்டி உப்பு

  • 2 தக்காளி (நறுக்கியது)

  • 1/4 கப் கொத்தமல்லி தழை (நறுக்கியது)

செய்முறை: 

முதலில் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கியதும், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, தனியாத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறுங்கள். 

இப்போது தக்காளியை சேர்த்து அது மென்மையாக வேகும் வரை வதக்கிய பின்னர் பன்னீர் துண்டுகளை சேர்த்து 5 நிமிடங்கள் அப்படியே கிளறி விடவும். இறுதியாக கொத்தமல்லி தழையைத் தூவி அலங்கரித்தால், சூப்பரான சுவையில் பன்னீர் குர்ச்சான் தயார். இதை சூடான சாதம், ரொட்டி அல்லது பூரியுடன் சேர்த்து பரிமாறினால், அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். 

இதையும் படியுங்கள்:
செம டேஸ்டான 'ஹைதராபாத் பன்னீர் மசாலா' ரெசிபி! 
North India Special 'Panneer Kurchan' recipe!

இந்த ரெசிபியில் உங்களது விருப்பத்திற்கு ஏற்ப மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம். பன்னீருக்கு பதிலாக சில காய்கறிகளை சேர்த்து செய்தாலும் சூப்பர் சுவையில் இருக்கும். உங்கள் குழந்தைகளுக்கு பிடித்தமான உணவாக இதை மாற்ற பச்சை மிளகாயை நீக்கி விடவும். இதன் சுவையை அதிகரிக்க ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்தால் நன்றாக இருக்கும். 

இந்த ரெசிபி செய்வதற்கு மிகவும் எளிது என்பதால், அவசர நேரத்தில் உடனடியாக தயாரித்து பிறருக்கு பரிமாற முடியும். மேலே குறிப்பிட்ட எளிய வழிமுறைகளைப் பின்பற்றி இந்த ரெசிபியை தயாரித்து உங்களது அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com