சூடாக அல்ல, குளிர்ச்சியாக: புத்துணர்ச்சி தரும் சூப் வகைகள்!

refreshing dish
Types of soup!
Published on

சூப் என்றால் நாம் சூடாக சாப்பிடுவோம் என்று நினைப்பது வழக்கம். ஆனால் ரஷ்யாவில் பிரபலமான “ஒக்ரோஷ்கா (Okroshka)” என்பது கோடைக்காலத்தில் உடலை குளிர்விக்க சாப்பிடப்படும் refreshing dish. இதில் காய்கறி, கீரை, சமைத்த உருளைக்கிழங்கு, முட்டை, தயிர்/பட்டர்மில்க் போன்றவை சேர்க்கப்படும். இதை செய்ய

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – 2 (சமைத்து, சதுரமாக நறுக்கவும்)

காரட் – 1 (சமைத்து, நறுக்கவும்)

வெள்ளரி – 1 (சின்ன துண்டுகள்)

வெங்காயத்தாள் (Spring onion) – 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கப்பட்டது)

முட்டை – 2 (சமைத்து, துண்டுகள்)

கொத்தமல்லி  – சிறிது (நறுக்கப்பட்டது)

தயிர் – 1 கப்

பால்/தண்ணீர்/பட்டர்மில்க் – 1 கப் (சூப் கனம் adjust செய்ய)

உப்பு – தேவைக்கேற்ப

மிளகு பொடி – சிறிது

எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்

செய்முறை: 

சமைத்த உருளைக்கிழங்கு, காரட், வெள்ளரி, வெங்காயத்தாள், முட்டை,  ஆகியவற்றை ஒரு பெரிய பவுளில் போடவும். மேல் கொத்தமல்லி  கீரை சேர்க்கவும். தனியாக ஒரு பாத்திரத்தில் தயிரை நன்றாக அடிக்கவும். அதில் பால்/தண்ணீர்/பட்டர்மில்க் சேர்த்து சற்று குலுக்கவும். உப்பு, மிளகு, எலுமிச்சை சாறு சேர்த்து taste adjust செய்யவும். தயார் செய்த தயிர் கலவையை காய்கறி mix-க்கு மேல் ஊற்றவும். நன்றாக கலந்து fridge-இல் 30 நிமிடம் குளிரவைத்த பிறகு பரிமாறவும்.

“ஒக்ரோஷ்கா” சூப்பை குளிர்ச்சியாக (fridge-இல் இருந்து எடுத்தே) பரிமாற வேண்டும். மேல் கொத்தமல்லி தூவி அலங்கரிக்கலாம்.  சிறிது மஸ்டர்ட் சாஸ் அல்லது ஹார்ஸ்-ரேடிஷ் சேர்த்து spicy flavor கொடுக்கலாம்.

இதையும் படியுங்கள்:
கொடுக்காப்புளியின் மருத்துவகுணங்கள் மற்றும் வதக்கல்!
refreshing dish

கஸ்பாசோ (Spanish Cold Soup)

சூப்பை சூடாகவே சாப்பிட வேண்டும் என்ற நம்முடைய பழக்கத்திற்கு முற்றிலும் மாறாக, ஸ்பெயின் நாட்டில் கோடைக்காலத்தில் மிகப் பிரபலமான குளிர் சூப்தான் கஸ்பாசோ (Gazpacho). இது தக்காளி, வெள்ளரி, குடைமிளகாய், வெங்காயம் போன்ற பச்சை காய்கறிகளை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும், மிகத் தணிவூட்டும் (refreshing) ஒரு dish. இதை செய்ய

தேவையான பொருட்கள்

பக்குவமான தக்காளி – 4 (பெரியது, தோல் நீக்கி நறுக்கவும்)

வெள்ளரி – 1 (சிறியது, தோல் சீவி நறுக்கவும்)

பச்சை குடைமிளகாய் – 1 (நறுக்கப்பட்டது)

வெங்காயம் – 1 (சிறியது, நறுக்கப்பட்டது)

பூண்டு – 2 பல்

ஆலிவ் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

வெள்ளை  Vinegar – 2 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

மிளகு பொடி – சிறிதளவு

ப்ரெட் துண்டுகள் – 2 (தண்ணீரில் ஊறவைத்தது)

குளிர்ந்த தண்ணீர் – ½ கப்

செய்முறை:  

தக்காளி, வெள்ளரி, குடைமிளகாய், வெங்காயம், பூண்டு ஆகியவற்றை மிக்சியில் போடவும். ஊறவைத்த ப்ரெட் துண்டுகளையும் சேர்க்கவும். ஆலிவ் எண்ணெய், வெங்காய சாறு, உப்பு, மிளகு சேர்த்து நன்றாக blend செய்யவும். மிகவும் கனம் இருந்தால் குளிர்ந்த தண்ணீர் சேர்த்து adjust செய்யவும். தயார் செய்த Gazpacho-வை fridge-இல் குறைந்தது 2 மணி நேரம் வைத்தால் சுவை அதிகரிக்கும்.  குளிர்ந்த Gazpacho-வை கிண்ணத்தில் ஊற்றி பரிமாறவும்.

மேல் வெள்ளரி/தக்காளி சிறு துண்டுகள், ஆலிவ் எண்ணெய் சில துளிகள் அல்லது ப்ரெட் குருடான்ஸ் (croutons) தூவினால் இன்னும் சுவையாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com