சுவையான Sauce ஐ இனி வீட்டிலேயே செய்யலாம்...!

தக்காளி சாஸ்
தக்காளி சாஸ்tamil.boldsky.com
Published on

ப்போது சாஸ் என்பது அத்தியாவசிய ஒன்றாக மாறிவிட்டது. எளிமையான உணவிலிருந்து அனைத்து உணவிற்கும் சாஸையே அனைவரும் விரும்புகிறார்கள். நூடுல்ஸ், ப்ரெட் ஆம்லேட், பாஸ்தா, சப்பாத்தி ரோல், கட்லட் என அனைத்திற்கும் சாஸ் தேவைப்படுகிறது. ஆகையால் நாம் இனி வீட்டிலேயே ஆரோக்கியமான சாஸை செய்யத் தொடங்கலாம் வாருங்கள்.

தக்காளி சாஸ்:

முதலில் பாத்திரத்தில் தக்காளியை எடுத்து தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் தோல் உறித்து சூடு குறைந்தவுடன் அரைக்க வேண்டும். மென்மையாக அரைத்த பின்னர் வடிகட்டிவிட்டு அதனைப் பாத்திரத்தில் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அடி பிடிக்காமல் நன்றாக கிளற வேண்டும். 10 நிமிடங்கள் நன்றாக கொதித்த பின்னர் அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், 3 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் சிறிது உப்பு சேர்த்து கலக்கிவிடவும். சற்று கெட்டியானதும் 3 டேபிள் ஸ்பூன் வினிகர் சேர்த்து கிளறிவிட்டு இறக்கினால் சுவையான தக்காளி சாஸ் தயார்.

மிளகாய் சாஸ்:

ரு பாத்திரத்தில் வர மிளகாய் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அந்த மிளகாயுடன் பூண்டு, வெங்காயம், தக்காளி சிறிது சேர்த்து நன்றாக அரைக்கவும். அதனை வடிக்கட்டிய பின்னர் கடாயில் சேர்த்து கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும். பின்னர் சர்க்கரை மற்றும் உப்பு சேர்க்கவும். மேலும் வினிகர் மற்றும் எலுமிச்சைசாறு சேர்த்து இரண்டு நிமிடங்கள் சமைத்த பின் அடுப்பிலிருந்து இறக்கி ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் சுவையான மிளகாய் சாஸ் ரெடி.

சோயா சாஸ்:

முதலில் பாத்திரத்தில் ஒரு கப் சர்க்கரையுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். ஆரம்பத்திலிருந்து முடியும் வரை நன்றாக கின்டிக்கொண்டே இருக்க வேண்டும். சர்க்கரை நன்றாக கரைந்து டார்க் நிறம் ஆகும் வரை அடுப்பில் வைக்கவும். பின்னர் சோயா மாவு (அல்லது கார்ன்ஃப்லவர் மாவு) கோதுமை மாவை தண்ணீருடன் கலந்து தனியாக வைக்கவும்.

அந்தக் கலவையை சர்க்கரையுடன் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும். நன்றாக கொதிக்க வைத்த பின்னர் உப்பு மற்றும் மூன்று டேபிள் ஸ்பூன் அளவு வினிகர் சேர்த்து மீண்டும் நன்றாக கொதிக்க வைத்து இறக்கினால் சோயா சாஸ் ரெடி.

இதையும் படியுங்கள்:
ஆபரேஷன் செய்யும் ஏஐ.. வியக்க வைக்கும் தொழில்நுட்பம்!
தக்காளி சாஸ்

செஸ்வான் சாஸ்:

முதலில் பூண்டு இஞ்சி ஆகியவற்றை நறுக்கி வைத்துக்கொள்ளவும். வரமிளகாய் மற்றும் தக்காளியை வேகவைத்து தக்காளியின் தோலை நீக்கி விடவும். காஷ்மீர் சில்லி பவுடருடன் சேர்த்து வேகவைத்த தக்காளி மற்றும் வர மிளகாயை நன்றாக அரைத்து விடவும்.

செஸ்வான் சாஸ்
செஸ்வான் சாஸ்www.maalaimalar.com

பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து எண்ணெய் ஊற்றி பூண்டு, இஞ்சி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதனுடன் அரைத்த தக்காளி வரமிளகாயை சேர்த்து கொதிக்க விடவும். கொதித்தவுடன் ஒரு ஸ்பூன் சோயா சாஸ், தக்காளி சாஸ் சேர்த்து எண்ணெய் தனியாக வரவரைக்கும் அடுப்பில் வைத்துவிட்டு இறக்கினால் செஸ்வான் சாஸ் ரெடி.

பொதுவாக அனைத்து விதமான உணவிற்கும் இந்த சாஸ்களே பயன்படுத்துவார்கள். ஆகையால் இதனை தயார் செய்து ஃப்ரிட்ஜில் வைத்துக்கொள்வது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com