AI Technology in Operation.
AI Technology in Operation.

ஆபரேஷன் செய்யும் ஏஐ.. வியக்க வைக்கும் தொழில்நுட்பம்!

Published on

வருங்காலங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று ஏஐ உற்பத்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது மருத்துவத் துறையையும் விட்டு வைக்கவில்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது. இனி மருத்துவ துறையின் பல்வேறு வகையான நடவடிக்கைகளில் ஏஐ தொழில்நுட்பத்தை ஈடுபடுத்த மேலை நாடுகளினுடைய மருத்துவத் துறை ஒப்புதல் அளித்து வருகிறது. மேலும் இந்த நடவடிக்கைகள் ஆரம்பக்கால, ஆலோசனை மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளாக மட்டுமே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இவை வருங்காலத்தில் அறுவை சிகிச்சைகளை செய்யும் அளவிற்கான வாய்ப்புகளை ஏஐ தொழில்நுட்பத்திற்கு ஏற்படுத்தி தரும் சொல்லப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது மருத்துவ துறையின் முதல் கட்ட சேவைகளான எக்ஸ்ரே, ஸ்கேன் மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனைகளை ஒப்பிட்டு துல்லியமான தகவல்களை, நோயின் தன்மையை விளக்கும் அளவிற்கு அறிக்கையை வெளியிடும் அளவில் ஏஐ தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் உடலின் துல்லியமான ரத்தத்தின் சர்க்கரையின் அளவு, கொலஸ்ட்ரால், பிபி போன்றவற்றை ஸ்கேன் செய்து கூறும். இது மட்டுமல்லாமல் நோயாளியின் தொலைபேசியோடு இணைக்கப்பட்டு நோயாளிக்கான தகவல்களை உடனுக்குடன் தெரியப்படுத்தும் வகையிலும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது அமெரிக்காவில் உள்ள பிரபல மருத்துவமனைகளில் பயன்பாட்டுக்கு வந்திருக்கின்றன.

இதே நிலை தொடரும் பட்சத்தில் இன்னும் பத்து ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலமாக அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும் அளவிற்கு தொழில்நுட்பம் விரிவடையும் என்றும், மேலும் புற்றுநோய் மற்றும் சிக்கலான நோய்களுக்கான தீர்வுகளையும் அளிக்கக் கூடிய வகையில் தொழில்நுட்பம் விரிவடையும் என்றும் மருத்துவத்திற்கான செயற்கை நுண்ணறிவு கருவிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்:
கவுன்சிலிங் வழங்கும் செயற்கை நுண்ணறிவு.
AI Technology in Operation.

ஆனாலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மருத்துவத்துறைக்கு உதவிகரமாக மட்டுமே பயன்படுத்த வேண்டும். மருத்துவர் ஆலோசனை மருத்துவர் வழிகாட்டுதல் இன்றி எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபட க்கூடாது என்பதும் பெருவாரியான மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது. அதேசமயம் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஏஐ தொழில்நுட்பம் மூலம் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ள நாடுகளில் ஓரளவிற்கு நிலைமை சரியாக கூடும்.

logo
Kalki Online
kalkionline.com