கோடையில் அனைவரும் விரும்பும் 'ஐஸ் ஆப்பிள்' எனப்படும் 'நுங்கு' ரெசிப்பீஸ்!

கோடையில் அனைவரும் விரும்பும் 'ஐஸ் ஆப்பிள்' எனப்படும் 'நுங்கு' ரெசிப்பீஸ்!
Published on

'நுங்கு' என்று தமிழில் அழைக்கப்படும் ஐஸ் ஆப்பிள், பனங் காய்களின் உள்ளிருக்கும் சதைப் பற்றாகும். இது தாகம் தணிக்கும் ஓர் உணவாக இருப்பதோடு, உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் தருவதாகவும் உள்ளது.

இதிலுள்ள டயட்டரி ஃபைபர் செரிமானத்துக்கு உதவும், மலச் சிக்கலை நீக்கும். குறைந்த கலோரி கொண்ட நுங்கு உடல் எடை பராமரிப்பிற்கும் உதவுகிறது.

இதில் கார்போஹைட்ரேட்ஸ், ப்ரோட்டீன், கால்சியம், பைட்டோ நியூட்ரியன்ட்ஸ், வைட்டமின் C, A, E, K ஆகிய ஊட்டச் சத்துக்களும் நிறைந்துள்ளன.

ஐஸ் ஆப்பிளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் சில சுவையான உணவுகளின் ரெசிபிகளை இங்கு பார்ப்போம்.

நுங்கு சர்பத்:

தேவையானவை:

நுங்கு நசுக்கியது - 1 கப்

நன்னாரி சிரப் - 4 டேபிள் ஸ்பூன்

ஐஸ் வாட்டர் - 2 கப்

லெமன் ஜூஸ் - 2 டேபிள் ஸ்பூன்

கல் உப்பு - ¼ டீஸ்பூன்

செய்முறை:

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டுக் கலந்து, தேவைப்பட்டால் ஐஸ் க்யூப் சேர்த்துப் பரிமாறவும்.

ஐஸ் ஆப்பிள் ஐஸ் கிரீம்:

தேவையானவை:

நுங்கு நசுக்கியது - 2½ கப்

ஃபிரஷ் குளிர்ந்த க்ரீம் - ½ கப்

திக்கான தேங்காய்ப் பால் - ½ கப்

கன்டென்ஸ்ட் மில்க் - ¾ கப்

கல் உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் கலந்து ஒரு செவ்வக வடிவ ஐஸ்கிரீம் ட்ரேயில் ஊற்றி சீல் பண்ணவும். பின் ட்ரேயை ஃபிரீஸரில் வைத்து இரவு முழுவதும் ஃபிரீஸ் பண்ணவும். பிறகு வெளியில் எடுத்து ஆர்கானிக் தேன் செர்த்து உண்ணலாம்.

இதையும் படியுங்கள்:
Aval Poha Recipe: அட்டகாசமான 'அவல் போகா’ ரெசிப்பி!
கோடையில் அனைவரும் விரும்பும் 'ஐஸ் ஆப்பிள்' எனப்படும் 'நுங்கு' ரெசிப்பீஸ்!

கோகனட் - ஐஸ் ஆப்பிள் டிலைட்:

இளநீருடன் வெண்ணிலா ஐஸ்கிரீம் கலந்து அதன் மீது நசுக்கிய ஐஸ் ஆப்பிள் சேர்க்க சுவையான பார்ட்டி ட்ரிங்க் ரெடி.

ஐஸ் ஆப்பிள் ஜெல்லி:

ஐஸ் ஆப்பிளை துண்டுகளாக்கி, விருப்பமான ஜெல்லியுடன் கலக்கவும். பின் ஃபிரிட்ஜில் வைத்து கஸ்டர்ட்டுடன் கலந்து உண்ணலாம்.

நுங்கு ஸ்மூத்தி:

நசுக்கிய நுங்குத் துண்டுகளை பாலுடன் சேர்க்கவும். பின் பால் பவுடர் மற்றும் தேன் சேர்த்து மிக்ஸியில் அடிக்கவும். அதனுடன் சியா சீட் சேர்த்து, குளிர்வித்து உண்ணலாம்.

ஐஸ் ஆப்பிள் லால்லீஸ்:

ஐஸ் ஆப்பிளை ஜூஸாக்கி அதனுடன் கிவி, ஆரஞ்சு, பைனாப்பிள் துண்டுகளை சேர்த்துக் கலக்கவும். பின் கலவையை குல்ஃபி அல்லது கேன்டி மோல்டில் ஊற்றி ஃபிரீஸ் வைத்து உண்ணலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com