
நுங்கு ஷேக்
தேவையான பொருட்கள்:
தோல் எடுத்த இளநுங்கு -ஒரு கப்
திக்கான பால்- ஒரு கப்
பனங்கற்கண்டு - ஒரு டேபிள் ஸ்பூன்
பாதாம், முந்திரி, பிஸ்தா ஃப்ளேக்ஸ் - ஒரு டீஸ்பூன்
குங்குமப்பூ - சிறிதளவு
செய்முறை:
பாலுடன் பனங்கற்கண்டு, நுங்கை சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அடித்துக் கொள்ளவும். அதை அழகான கிளாஸ்களில் ஊற்றி அதன் மீது நட்ஸ் ஃப்ளேக்ஸ் தூவி ஓரிதழ் குங்குமப் பூவை வைத்து அலங்கரித்து கொடுக்க ருசியும் கலரும் அசத்தலாக இருக்கும். வெயிலுக்கு குளு குளு என்று குளிர்ச்சி தரும். கோடையில் குடலை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்கு சிறந்த ஷேக் இந்த நுங்கு ஷேக் தான். செய்து அசத்துங்க.
கேரட் பால்:
தேவையான பொருட்கள்:
கேரட் பெரியதாக - 2
பால் - ஒரு டம்ளர்
கற்கண்டு பொடி அல்லது சீனி - ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை:
கேரட்டை மிக்ஸியில் அடித்து அதன் சாறை பிழிந்து வைக்கவும். பாலை நன்றாக காய்ச்சி அதனுடன் கற்கண்டு பொடி மற்றும் கேரட் சாறை சேர்த்து லேசாக கொதிக்க விட்டு அருந்த வேண்டியதுதான். அருமையான எனர்ஜி பானம் இது. சோர்வாக இருக்கும் பொழுது இப்படி செய்து அருந்தினால் நல்ல சுறுசுறுப்பு கிடைப்பதை அறியலாம். சீக்கிரமாகவும் செய்து அருந்த முடியும்.
நுங்கு ஷேக், கேரட் பால் - இவற்றை குளிரூட்டி 'ஜில்' என்றும் பருகி மகிழலாம்.