மில்க் ஷேக்...
மில்க் ஷேக்...

‘ஆஹா’ சுவையில் ஆப்பிள் டிரை ஃப்ரூட்ஸ் மில்க் ஷேக் வாங்க செய்யலாம்!

Published on

ப்பிள், உலர்ந்த பழங்கள் அத்துடன் பாலைக்கொண்டு செய்யப்படும் இந்த மில்க்க்ஷேக் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. காலை உணவாக இது ஒன்றை எடுத்துக்கொண்டாலே போதுமானதாகும். அத்தகைய மில்க் க்ஷேக்கை வீட்டிலேயே செய்யலாமே!

தேவையான பொருட்கள்:

பாதாம்-5

முந்திரி-5

பிஸ்தா-5

பேரிச்சம் பழம்-3

பூசணி விதை-1 தேக்கரண்டி.

நறுக்கியை ஆப்பிள்-1

தேன்- 2 தேக்கரண்டி.

குளிர்ந்த பால்-1கப்.

செய்முறை விளக்கம்:

முதலில் ஒரு பவுலில் பிஸ்தா 5, பாதாம் 5, முந்திரி 5, பேரிச்சம்பழம் 3, பூசணி விதை 1 தேக்கரண்டி ஆகியவற்றுடன் சிறிது பால் சேர்த்து 30 நிமிடம் ஊற வைத்துக்கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
RO Water Vs Can Water: எதுதான் பெஸ்ட்?
மில்க் ஷேக்...

இப்போது மிக்ஸியில் நறுக்கிய ஆப்பிள் 1, தேன் 2 தேக்கரண்டி அத்துடன் ஊற வைத்த நட்ஸ், குளிர்ந்த பால் 1 கப் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும். இப்போது சுவையான ஆப்பிள் டிரை ஃப்ரூட் மில்க் ஷேக் தயார்.

ஒரு கண்ணாடி தம்ளரில் அரைத்த மில்க் ஷேக்கை  ஊற்றி அத்துடன் ஐஸ் சேர்த்து மில்க்ஷேக்கின் மேலே நறுக்கிய ஆப்பிள் மற்றும் பாதாமை அழகிற்கு தூவி பரிமாறவும். நீங்களும் ஒருமுறை வீட்டில் செய்து பார்த்துட்டு எப்படியிருந்தது என்று சொல்லுங்க.

logo
Kalki Online
kalkionline.com