குழந்தைகள் விரும்பும் நியூட்ரி லாலிபாப் செய்யலாமா?

நியூட்ரி லாலிபாப்
நியூட்ரி லாலிபாப்Image credit - youtube.com

விட்டாச்சு லீவு, இனி புதிது புதிதான ஸ்நாக்ஸ் வகைகளை  கண்டுபிடித்து செய்த வண்ணமே இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு வயிறும் நிறைய வேண்டும். பிடித்ததாகவும் இருக்க வேண்டும். சத்துள்ளதாகவும் இருக்க வேண்டும். என்ன செய்யலாம் என்று தேடுபவர்கள் இந்த நியூட்ரி லாலிபாப்பை ஸ்வீட், காரம் என வெரைட்டியாக செய்து தந்து அசத்தலாம்.


ஸ்வீட் நியூட்ரி லாலிபாப்

தேவை:
பாதாம் பருப்பு -8
முந்திரிப் பருப்பு -8
பிஸ்தாப் பருப்பு  - 10
டூட்டி ப்ரூட்டி --2 ஸ்பூன்
உலர் திராட்சை - 20
பேரீச்சை - 10
செர்ரி - 8
தேன் -2 ஸ்பூன்
மாரி பிஸ்கட் - 6
டூத் பிக் – தேவையானது

செய்முறை:
இங்கு தந்துள்ள அனைத்தையும் மிக்சியில் இட்டு இரண்டு சுழற்று சுற்றி ஒரு கிண்ணத்தில் போட்டு சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும். நீளமான டூத் பிக்கில் (லாலிபாப் குச்சிக்கு பதில்) இந்த உருண்டைகளை சொருகி வைத்து குழந்தைகளிடம் தந்து பாருங்கள்.

கார நியூட்ரி லாலிபாப்
தேவை:

சிவப்பு அவல் - சிறிய கப்
உருளைக்கிழங்கு -2
கார்ன்பிளார் - 2 ஸ்பூன்
அரிசி மாவு - 2 ஸ்பூன்
கேரட் - துருவல் (1)
முட்டைக்கோஸ் - மெலிதாக  நறுக்கியது
எண்ணெய் -தேவைக்கு
மிளகுத்தூள் -1ஸ்பூன்
உப்பு- தேவைக்கு
மிளகாய்த்தூள் (தேவைப்பட்டால்)- சிறிது

இதையும் படியுங்கள்:
பூலோகத்தின் சொர்க்கம்; பூக்களின் பள்ளத்தாக்கு எங்குள்ளது தெரியுமா?
நியூட்ரி லாலிபாப்

செய்முறை:
சிவப்பு அவலை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். மற்ற அனைத்தையும் கலந்து உப்பு போட்டு சிறு உருண்டைகளாக்கி எண்ணெயில் இட்டுப் பொரித்து ஆறியதும் டூத் பிக்கில் செருகி தக்காளி சாஸ் உடன் தந்தால் சூப்பர் என்பார்கள். ரிச்சான சத்துகளுடன் டேஸ்டியான வயிறு நிறையும் வீட்டிலேயே செய்த ஆரோக்கியமான லாலிபாப்கள் ரெடி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com