சத்தான ஆம்லா ரைஸ்! (நெல்லிக்காய் சாதம்)

சத்தான ஆம்லா ரைஸ்! (நெல்லிக்காய் சாதம்)

தேவையான பொருட்கள்:

பெரிய அளவிலான நெல்லிக்காய் - 4. பச்சை மிளகாய் - 2, பச்சைப் பட்டாணி - ஒரு கைப்பிடி, கேரட் சிறியது - 1. நல்லெண்ணெய் - 4 ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, வறுத்த வேர்க்கடலை - ஒரு கைப்பிடி அளவு, கடுகு - 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ½ டீஸ்பூன், கொத்துமல்லி + கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை:

சாதத்தை உதிர் உதிர்வாக ஒரு தட்டில் ஆற வைத்து, 2 ஸ்பூன் நல்லெண்ணெயைப் பரவலாக ஊற்றவும்.

நெல்லிக்காயைப் பச்சையாகத் துருவி, கொட்டையை நீக்கிவிட்டு, பச்சை மிளகாய் சேர்த்துப் பின் மிக்ஸியில் அரைக்கவும். ஒரு வாணலியில் கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலையை தாளித்துப் பின் அரைத்த விழுதை நன்கு வதக்கவும் (தண்ணீர் சுண்டி வரும் வரை) பட்டாணி மற்றும் கேரட் துருவலை வேகவைத்து, பின் தேவையான அளவு உப்பு சேர்த்து விழுதுடன் சேர்த்து சாதத்தில் கலக்கவும்.

இதையும் படியுங்கள்:
இந்த தீபாவளிக்கு புதுசா வந்துள்ள ஆடை ரகங்கள்!
சத்தான ஆம்லா ரைஸ்! (நெல்லிக்காய் சாதம்)

வறுத்த வேர்க்கடலையை மேலே தூவி, கொத்துமல்லி இலையைத் தூவிப் பரிமாறவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com