சத்து நிறைந்த ப்ரக்கோலி ஓட்ஸ் சூப்!

ப்ரக்கோலி ஓட்ஸ் சூப்
ப்ரக்கோலி ஓட்ஸ் சூப்
Published on

குளிர்காலத்திற்கு ஏற்ற சூப் வகைகளில் ஒன்று ப்ரக்கோலி ஓட்ஸ் சூப். டயட்டில் உள்ளவர்களுக்கு ஓட்ஸ், ப்ரோக்கோலி சேர்த்து சத்தான சுவையான இந்த சூப்பினை செய்து தரலாம்.

இந்த சூப்பை எப்படி செய்வது ?

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் – ப்ரோக்கோலி சூப்

தேவையான பொருட்கள் :

ஓட்ஸ் – அரை கப்,

ப்ரோக்கோலி – கால் கப்,

ஓமம் – அரை டீஸ்பூன்,

பச்சை மிளகாய் – ஒன்று,

பிரிஞ்சி இலை – ஒன்று,

இஞ்சி – ஒரு அங்குலத் துண்டு (தட்டியது),

பால் – ஒரு கப்,

மல்லித்தூள் (தனியாத்தூள்),

மிளகுத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்,

வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,

உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை :

* பிரஷர் பானில் வெண்ணெயை சூடாக்கி, பிரிஞ்சி இலை, ப்ரோக்கோலிகளைச்சேர்த்து சில நிமிடங்கள் கிளறி, ஒரு கப் பால், ஓட்ஸ், பச்சை மிளகாய், இஞ்சிசேர்த்து குறைந்த தீயில் ஒரு விசில் வரும் வரை வேக விடவும்.

* பிறகு இஞ்சி, மிளகாயை நீக்கிவிட்டு கலவையை மிக்ஸியில் விழுதுபோல் அரைத்து, பெரிய கண் உள்ள வடிகட்டியின் மூலம் வடிகட்டவும்.

soup
soup

* வடிகட்டிய கலவையை மீண்டும் அடுப்பில் வைத்து உப்பு, ஓமம், தேவையெனில் பால் (அ) தண்ணீர் சேர்த்து குறைந்த தீயில் ஒரு கொதி விடவும்.

* பரிமாறுவதற்கு முன் மிளகுத்தூள் தூவி பறிமாறவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com