சத்தான சிறுதானிய ஸ்பெஷல் ரெசிபிஸ்!

ராகி பக்கோடா
ராகி பக்கோடா www.youtube.com

ராகி பக்கோடா

தேவை: ராகி மாவு - 1 கப், வெங்காயம் -1, முட்டைகோஸ் ¼ கப், மிளகாய்த்தூள் - ½ டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, பூண்டு நசுக்கியது – 1 டீஸ்பூன் கறிவேப்பில்லை - சிறிது, எண்ணெய் - பொரிப்பதற்கு.

செய்முறை: ராகி மாவில் வெங்காயம், மிளகாய்ப் பொடி, கறிவேப்பில்லை, முட்டைக்கோஸ், நசுக்கிய பூண்டு சேர்த்து, ஒரு ஸ்பூன் சூடான எண்ணெய் விட்டு, சிறிது தண்ணீர் தெளித்துக் கெட்டியாகக் கலந்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறு உருண்டைகளாக உருட்டி நன்கு வேகும் வரை சிம்மில் வைத்துப் பொரித்து எடுக்கவும்.

இதையும் படியுங்கள்:
தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள 6 வழிகள்!
ராகி பக்கோடா

சுவையான ராகி பக்கோடா குளிர் கால ஈவ்னிங் ஸ்நாக்ஸுக்கு ஏற்றது.

வரகு வடை

தேவை: வரகு அரிசி – ½ கப், துவரம் பருப்பு -  ½கப் வெங்காயம் - 1, சோம்பு - ¼  டீஸ்பூன், பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை, காய்ந்த மிளகாய் - 2, உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

வரகு வடை
வரகு வடைwww.healthnorganicstamil.com

செய்முறை:

அரிசி மற்றும் பருப்பை மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். சோம்பு, பெருங்காயம், மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். கெட்டியாக இருக்க வேண்டும். பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து பிசைந்து, சிறு உருண்டைகளாகப் பிடித்துவைக்கவும்.

வாணலியில் எண்ணெய்க் காய வைத்து உருண்டைகளை வடையாக தட்டி சிவக்க பொரித்து எடுக்கவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com