தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள 6 வழிகள்!

motivation Image
motivation Imagepixabay.com

ருவர் வெற்றிகரமான வாழ்க்கையை, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ விரும்பினால் அவருக்கு தன்னம்பிக்கை மிகவும் அவசியம் என்ன தான் தன்னம்பிக்கை புத்தகங்கள் படித்தாலும் தனக்கென்று தன்னம்பிக்கை இருந்தால் மட்டுமே ஒருவர் வாழ்வில் ஜொலிக்க முடியும். ஆறு முக்கியமான வழிகளை கொண்டு ஒருவர் தன்னுடைய தன்னம்பிக்கையின் அளவை உயர்த்திக் கொள்ளலாம். 

1. தினமும் காலையில் எழுந்ததும் இன்றைய நாள் இனிதான நாள் என்று எண்ண வேண்டும். இன்று நடக்கும் எல்லா விஷயங்களும் நல்லதாகவே நடக்கும் என்று நம்பிக்கையுடன் தொடங்க வேண்டும்.

2. ரு பெரிய லட்சியத்தை அடைய விரும்பினால் அவற்றை சிறு சிறு இலக்குகளாக பிரித்துக் கொள்ளவும். அவற்றை கருத்தில் கொண்டு ஒவ்வொன்றாக முடிக்கும் போது தன்னம்பிக்கை அதிகரிக்கும். வெற்றியும் வந்த சேரும்.

3. சின்ன வெற்றிகளைக் கூட கொண்டாடுங்கள். அவை தரும் மகிழ்ச்சி தான் அடுத்த இலக்குகளை வெற்றிகரமாக செய்ய உதவும். தனக்குத்தானே பாராட்டிக் கொள்வது சிறிய பரிசு தந்து கொள்வது என்று கொண்டாடிக் கொள்ளுங்கள்.

4. ன்மேல் கவனம் செலுத்துவது முக்கியம். சுய கவனம் முக்கியம். உடற்பயிற்சி செய்வது சரியான அளவு தூக்கம் சமச்சீர் உணவு இவற்றில் கவனம் வைக்க வேண்டும். உடல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே அது உள்ளத்தையும் மனதையும் ஆரோக்கியமாக வைக்கும்.

இதையும் படியுங்கள்:
பைரவரை எந்த நாளில் வணங்க என்ன பலன் கிடைக்கும்?
motivation Image

5. வால்களை எதிர்கொள்ள நேர்ந்தால் அவற்றை கற்றுக்கொள்ள கிடைத்திருக்கும் சந்தர்ப்பமாக நினைத்துக் கொண்டு அவற்றை விட மனதுடன் எதிர்கொள்ள வேண்டும். கடினமான விஷயங்களை எதிர்கொள்ள புதிதாக ஒன்றை கற்றுக் கொள்ள வேண்டும் என்று இருந்தால் தயங்காமல் புதிய விஷயங்களை கற்றுக்கொண்டு தன்னை நன்றாக முன்னேற்றிக் கொள்ள வேண்டும். இதனால் தன்னம்பிக்கையின் அளவு நன்றாக உயரும்.

6. ப்போதும் தன்னம்பிக்கை மிகுந்த நண்பர்களையும் உறவினர்களையும் கொண்டிருக்க வேண்டும். ஏதாவது ஒரு காரணத்தால் தன்னம்பிக்கையின் அளவு குறைந்து போனால் அவர்கள் உதவி செய்து தன்னம்பிக்கையை உயர்த்துவார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com