இளநீர் தாகம் தணிக்க மட்டும்தானா?

Ilaneer Thaagam Thanikka Mattumthaanaa?
Ilaneer Thaagam Thanikka Mattumthaanaa?Shobana Vigneshwar

ளநீர் அதிக நன்மைகள் கொண்ட ஒரு இயற்கை பானம். இது இயற்கையான எலக்ட்ரோலைட் போல் செயல்படும். மேலும், இதில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம், சோடியம் நமது இதய ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கிறது. 1 கப் இளநீரில், 60 கலோரிகள் மட்டுமே உள்ளது. இதில் உள்ள மெக்னீசியம் டைப் 2 சர்க்கரை நோயை குணப்படுத்த உதவும். மேலும், இரத்த அழுத்தம் குறையும்.

இதில் உள்ள அதிக பொட்டாசியம் அளவு இரத்த அழுத்தத்தை குறைக்கும். இதனால் இதய இரத்தக் குழாய்களை பாதிக்கும் நோய் ஏற்படாது. இளநீரில் உள்ள சத்துகள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை உறுதிப்படுத்துகிறது. இந்நிலையில் தொடர்ந்து இளநீர் குடித்தால் சிறுநீரகக் கல் ஏற்படாது.

இதில் உள்ள நீர் சத்துக்கள், நமது சருமத்திற்கு உதவியாக உள்ளன. இது நமக்கு இளமையான தோற்றம் கொடுக்கிறது. முகப்பரு போன்ற விஷயங்கள், நம்மை பாதிக்காது. இளநீரை அதிகமாகக் குடித்தால், அதிக சர்க்கரை மற்றும் கலோரிகளை உடலுக்குக் கொடுக்கும். இதனால் உடல் எடை அதிகமாகலாம்.

இளநீரில் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின்கள் பி, சி, துத்தநாகம் போன்ற சத்துகள் இருக்கின்றன. இளநீர் நமது உடலுக்கு குளிச்சியை தருகிறது. இளநீர் வயிற்று புண்களை குணப்படுத்துகிறது. இளநீர் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் மருந்தாக உள்ளது.

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், உடல் வலியை நீக்கி உடலுக்கு தேவையான சக்தியை இளநீர் கொடுக்கிறது மற்றும் கர்ப்பப்பையை பலப்படுத்துகிறது.

நமது உடல் வெப்பத்தை இளநீர் சமநிலைப்படுத்துகிறது. தினமும் இரவு ஒரு இளநீரில் 15 கிராம் வெந்தயத்தை போட்டு ஊற வைத்து மறுநாள் காலை அந்த நீரை பருகி வந்தால் சர்க்கரை நோய் குறையும்.

இளநீரில் பொட்டாசியம், மெக்னீஷியம், எலக்ட்ரோலைட் ஆகியவை உள்ளன. இளநீருடன் சப்ஜா விதைகளை சேர்த்து சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும். இதில் கரையும் நார்சத்து உள்ளது. இது நம்மை வறட்சியிலிருந்து காப்பாற்றும். இதில் குறைந்த கலோரிகள் இருப்பதால் சர்க்கரை கலந்த குளிர் பானங்களை விட இது நல்லது. சப்ஜா விதைகள் இயற்கையாக குளிர்ச்சித்தன்மை கொண்டவை. இது இரத்த சர்க்கரையை குறைக்கும். மேலும் மலச்சிக்கலுக்கு நிவாரணம் தரும். மேலும், உடல் அதிக வெப்பமாகாமல் பார்த்துக்கொள்ளும்.

இளநீர் உடல் உஷ்ணத்தை குறைப்பதுடன், குளிர்ச்சியை தருகிறது. இளநீர் கோடைக்கு ஏற்ற சத்தான பானமாக உள்ளது. இளநீர் ஜீரண சக்தியை மேம்படுத்துவதுடன், மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. இரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதற்கு இளநீர் உதவுகின்றது.

இதையும் படியுங்கள்:
உடலுக்கு வலு சேர்க்கும் ஆஞ்சநேயர் வடை!
Ilaneer Thaagam Thanikka Mattumthaanaa?

இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. உடலில் ஏற்படும் நீர், உப்பு பற்றாக்குறையை இளநீர் சரி செய்கிறது. இளநீர் சாப்பிடும்போது உமிழ்நீர் சுரப்பு அதிகரித்து ஜீரணத்திற்கு உறுதுணையாக அமைவதோடு வயிறு தொடர்பான பிரச்னைகளும் தவிர்க்கப்படுகின்றன. இளநீர் தேவையில்லாத கொழுப்புக்களையும் கரைத்து வெளியேற்றும்.

உங்கள் முகத்தில் பரு, சரும செரசெரப்பு உள்ளதா? ஒரு இளநீரை வெட்டி அந்த நீரை கொண்டு முகத்தை கழுவ, அது டூனர் போல வேலை செய்யும், சிறந்த மாய்ஸ்சுரைசரும் கூட.

நைட் பார்ட்டிகளில் கலந்து கொண்டு விட்டு வந்து, ‘ஹேங் ஓவரில்’ அவதிப்படுகிறீர்களா ஒரு பிரஷ் இளநீர் சாப்பிட, அது உங்கள் வயிற்றை சுத்தப்படுத்தி, மது அருந்தியதால் ஏற்பட்ட நீர்ச்சத்து குறைபாட்டை சரிசெய்து ஹேங் ஓவர் பாதிப்பை சீராக்கும்.

தசை வலி, தசை பிடிப்பால் அவதிப்படுகிறீர்களா? ஓர் இளநீர் சாப்பிட்டால் அதிலுள்ள பொட்டாசியம் சத்து உங்கள் தசை வலியை சரி செய்யும். உங்கள் தலைமுடி பளபளப்பாக வேண்டுமா? எந்த கண்டிஷனரும் தேவையில்லை. ஒரு இளநீரை கொண்டு உங்கள் தலைமுடியை கழுவுங்கள். உங்கள் தலைமுடி பளபளப்பாக இருக்கும். இளநீரை தலையில் தடவினால் பொடுகு தொல்லை நீங்கும். இளநீரில் ஆன்டி - ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. சேதமடைந்த முடியை மீட்டெடுக்கவும் உதவுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com