சத்தான சிறுதானிய ஸ்பெஷல் ரெசிபிஸ்!

தினை சர்க்கரை பொங்கல்
தினை சர்க்கரை பொங்கல்www.youtube.com

தினை சர்க்கரை பொங்கல்

தேவை: தினை - ¼ கப், பாசிப் பருப்பு - 3 டீஸ்பூன், வெல்லம் - ¼ கப், ஏலக்காய் பொடி - ஒரு சிட்டிகை, நெய் - 3 டீஸ்பூன், முந்திரி பருப்பு - 2, திராட்சை - 3.

செய்முறை: தினை அரிசி மற்றும் பாசிப் பருப்பை வெறும் வாணலியில் 3 நிமிடம் வறுக்கவும். தேவையானத் தண்ணீர் சேர்த்துக் குழைய வேக வைத்துக்கொள்ளவும். அதன் பின் வெல்லத்தைக் கொதிக்கவைத்து வடிகட்டிய பின் மீண்டும் மூன்று நிமிடம் கொதிக்க விடவும்.

இதையும் படியுங்கள்:
மனித மூளைக்கு ஏற்றார் போல் செயல்படத் தொடங்கியுள்ள AI!
தினை சர்க்கரை பொங்கல்

வேகவைத்த அரிசியை ஒரு கரண்டியால் நன்றாகக் மசித்துக்கொள்ளவும். அதன் பின் வெல்லப்பாகில் போட்டு நன்குக் கிளறவும், நெய், ஏலக்காய்ப் பொடி சேர்க்கவும். முந்திரி மற்றும் திராட்சையை நெய்யில் வறுத்து இதில் போடவும். கமகமக்கும்

தினைச் சர்க்கரை பொங்கல் தயார்.

தினை கிச்சடி

தினை கிச்சடி
தினை கிச்சடிwww.youtube.com

தேவை : தினை அரிசி - ¼ கப், பாசிப் பருப்பு - ¼ கப், காய்கறிகள் - 4 கப் (கேரட், பட்டாணி, காலிஃப்ளவர்). மிளகாய்த் தூள் - ½ டீஸ்பூன், மல்லி தூள் - ¼ டீஸ்பூன், சீராகத் தூள் - ¼ டீஸ்பூன், கரம் மசாலா - 2 சிட்டிகை, உப்பு தேவைக்கு, எண்ணெய் - 2 டீஸ்பூன், வெங்காயம் -1

செய்முறை: வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கிக்கொள்ளவும். தினை அரிசி மற்றும் பாசிப் பருப்பை இருபது நிமிடம் ஊற வைக்கவும். குக்கரில் எண்ணெய்ச் சேர்த்து, வெங்காயத்தை வதக்கி, காய்கறிகளைப் போட்டு 2 நிமிடம் கிளறவும். உப்பு, மிளகாய்த் தூள், மல்லித் தூள், சீரகத் தூள் சேர்க்கவும். 2 கப் தண்ணீர் விடவும். தினை மற்றும் பாசி பருப்பைப் போடவும்.

குக்கரில் 5-6 விசில் விட்டு குழைவாக வேக வைக்கவும். நன்கு கிளறியபின் கொத்தமல்லித் தூவி சூடாகப் பரிமாறவும். சூப்பர் தினைக் கிச்சடி தயார்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com