மனித மூளைக்கு ஏற்றார் போல் செயல்படத் தொடங்கியுள்ள AI!

Human Brain like AI.
Human Brain like AI.
Published on

மனித மூளைகளின் அலைகளை பதிவு செய்து மனித மூளைகளோடு இணைந்து ஏஐ தொழில்நுட்பத்தால் செயல்பட முடியும் என்பதை ஜப்பான் பல்கலைக்கழகம் தனது ஆய்வில் கண்டுபிடித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு எனும் ஏஐ தொழில்நுட்பத்தை மனித மூளையோடு இணைத்து ஆய்வு பணியை மேற்கொள்ள ஜப்பான் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன‌. இதன் ஒரு பகுதியாக ஜப்பான் ஒசாக பல்கலைக்கழகம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் நபர்களிடம் பத்தாயிரம் புகைப்படங்களை காட்டி மூளையில் பதிவு செய்தது. அதே நேரம் அவர்களுக்கு முன்பே ஏஐ தொழில்நுட்பத்தோடு பயிற்சியும் அளிக்கப்பட்டதால், அவர்கள் மூளையின் தரவுகளை பெரும் வகையில் தொடர்புகள் அமைக்கப்பட்டன.

இதன் மூலம் சம்பந்தப்பட்ட நபர் புகைப்படத்தை பார்க்கும் பொழுது மூளையில் ஏற்படும் அலைகளைப் பதிவு செய்து கொண்டது‌. மேலும் அதன் பிறகு ஏஐ இடம் ஒரு குறிப்பிட்ட புகைப்படம் குறித்து கேட்கும் பொழுது சரியாக அதை காட்டி ஆச்சரியப்பட செய்து இருக்கிறது. இது மட்டும் இல்லாமல் பாடல்கள் கேட்கும்பொழுதும், கதைகள் சொல்லப்படும் பொழுதும் மனித மூளையில் ஏற்படும் அலைகளை ஆராய்ந்து அதேபோன்று ஒரு கதையை வெளிப்படுத்தியது. இதன் மூலம் ஏ ஐ மனித மூளைக்கு ஏற்றார் போல் செயல்பட தொடங்கி இருக்கிறது. இதன் மூலம் பல்வேறு விதமான விஷயங்களை நினைவு படுத்த முடியும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
ஆபரேஷன் செய்யும் ஏஐ.. வியக்க வைக்கும் தொழில்நுட்பம்!
Human Brain like AI.

இது மட்டுமல்லாமல் ஏஐ இடம் ஆங்கிலத்தில் உரையாடல் நடத்துவதன் மூலம் சரியான முடிவுகளை, பல்வேறு விதமான முடிவுகளை வழங்குகிறது. ஏஐ பல்வேறு வட்டார மொழிகளில் செயல்படக்கூடியது என்றாலும், ஆங்கில மொழிய அதிகம் பயிற்றுவிக்கப்பட்டிருப்பதால் ஆங்கில மொழியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பல்வேறு விதமான பதில்களை அளிக்கிறது என்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com