சத்தான சிறுதானிய ஸ்பெஷல் ரெசிபிஸ்!

ஜோவார் இனிப்பு பணியாரம்
ஜோவார் இனிப்பு பணியாரம்www.youtube.com

ஜோவார் இனிப்பு பணியாரம்

தேவை: ஜோவார் (வெள்ளைச் சோளம்) மாவு – ¼ கப் வெல்லம் - 1/4 கப், தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன், ஏலக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை, நெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை: வெல்லத்தைத் தண்ணீர் விட்டுக் கொதிக்கவிட்டு. வடிகட்டிக் கொள்ளவும். ஜோவார் மாவில் வெல்லக் கரைசலைச் சேர்த்து ஏலக்காய்ப் பொடி, தேங்காய்த் துருவல் சேர்த்து, இட்லி மாவு பதத்திற்குக் கரைத்துகொள்ளவும். குழிப் பணியாரக் கல்லில் இருபுறமும் சுட்டு எடுக்கவும். சுடும்போது, நெய் சிறிது விடவும்.

இதையும் படியுங்கள்:
பாடி ஸ்கல்ப்டிங் என்றால் என்னவென்று தெரியுமா?
ஜோவார் இனிப்பு பணியாரம்

சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம், கொழுப்பு மற்றும் நார் சத்துக்கள் அடங்கி உள்ளன.

ராகி கஞ்சி

ராகி கஞ்சி
ராகி கஞ்சி

தேவை: ராகி மாவு - 2 டீஸ்பூன், தண்ணீர் - 1 கப், சர்க்கரை -1 டீஸ்பூன், ஏலக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை, பால் - ½ கப்.

செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் ராகி மாவை கட்டியில்லாமல் தண்ணீரில் கரைத்துக்கொள்ளவும். அடுப்பில் வைத்து கூழ் போல் ஆனவுடன் பால், ஏலக்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து ஒரு கொதி விட்டு சூடாகப் பரிமாறவும். தேவைப்படும் எனில் பாதாம் பருப்புகளையும் ராகி மாவுடன் வறுத்துப் பொடித்துச் சேர்த்துக்கொள்ளலாம்.

கால்ஷியம் சத்து இதில் அதிகம் இருப்பதால் எலும்புகளுக்கு நல்லது. தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் இந்தக் கஞ்சியைப் பருகி வர எலும்புச் சம்மந்தப்பட்ட நோய்களுக்கு நோ எண்ட்ரி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com