பாடி ஸ்கல்ப்டிங் என்றால் என்னவென்று தெரியுமா?

பாடி ஸ்கல்ப்டிங் என்றால் என்னவென்று தெரியுமா?
https://www.lisaom.com

டல் எடையை குறைத்து அழகான தோற்றம் பெற வேண்டும் என்பது எல்லோருடைய ஆசையாக இருக்கும். ஆனால், அதற்கான தகுந்த உடற்பயிற்சி செய்வதற்கு நிறைய பேருக்கு நேரமும் பொறுமையும் இருப்பதில்லை. அதனால் உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை போன்ற வழிகளை நாடும்போது தேவையில்லாத பிரச்னை மற்றும் பயத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்குத் தீர்வாகத்தான் பாடி ஸ்கல்ப்டிங் என்ற முறை வந்திருக்கிறது. தேவையில்லாத இடங்களில் இருக்கும் சில விடாப்பிடியான கொழுப்புகள் எவ்வளவுதான் உடற்பயிற்சி செய்தாலும் கரைவது கிடையாது.

அதுபோன்ற கொழுப்புகளை அறுவை சிகிச்சை இன்றி பாடி ஸ்கல்ப்டிங் மூலம் நீக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தொடை, வயிற்றுப்பகுதி, கைகளில் இருக்கும் கொழுப்புகளை இந்த முறையில் நீக்கிவிடும் முறைதான் பாடி ஸ்கல்ப்டிங் ஆகும். பாடி ஸ்கல்ப்டிங் என்பது எடை குறைக்கும் செயல்முறை. அது உடலில் உள்ள சில பகுதிகளில் மட்டும் இருக்கும் கொழுப்புகளை நீங்கி, உடலின் வளைவுகளையும் அழகையும் தெரியும்படி செய்வதற்கான செயல்முறையாகும்.

பாடி ஸ்கல்ப்டிங்கில் நிறைய வகைகள் உண்டு. கூல் ஸ்கல்ப்டிங், எம் ஸ்கல்ப்ட் நியோ, அல்ட்ரா சவுண்ட் பேட் ரிடக்ஷன், இஞ்சக்ஷன் லிப்போலிசிஸ் போன்றவையாகும். இந்த முறையை முதலில் ஹார்வேர்டு பல்கலைக்கழகமே உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

கூல் ஸ்கல்ப்டிங் என்பது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு செல்களை உறைய வைப்பதாகும். குறைந்த வெப்பநிலையில் கொழுப்பு செல்களை உறைய வைப்பதால் உடலில் உள்ள மற்ற செல்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. உறைய வைத்த கொழுப்புகளை உடலில் இருந்து நிரந்தரமாக நீக்குவதே கூல் ஸ்கல்ப்டிங் முறையாகும்.

எம் ஸ்கல்ப்ட் நியோ முறை என்னவென்றால், அதிகமான ரேடியோ ப்ரீக்வன்சி வெப்பமும் எலக்ட்ரோ மேக்னெட்டிக் எனர்ஜியையும் பயன்படுத்தி உடலில் உள்ள கொழுப்புகளை கரைப்பது மட்டுமில்லாமல் தசையையும் உருவாக்குகிறது. அதிகப்படியான வெப்பம் உடனடியாக கொழுப்பு செல்களை அழித்து உடலில் இருந்து நீக்குகிறது.

அல்ட்ரா சவுண்ட் பாடி ரிடக்ஷன் என்பது அதிகமான ரேடியோ ப்ரீக்வன்சி மற்றும் அல்ட்ரா சவுண்டை வைத்து கொழுப்பையும் செல்லூலைட்டையும் நீக்குவதாகும்.

இஞ்சக்ஷன் லிப்போலிசிஸ் என்பது கன்னத்தில் இருக்கும் கொழுப்புகளை நீக்குவதற்கான செயல்முறை. மருத்துவர் டீஆக்ஸிகோலிக் என்ற அமிலத்தை தேவையான இடத்தில் செலுத்துவார். இது ஒரு கொழுப்பை உறிஞ்சும் முறையாகும். இதை செயல்முறை செய்வதற்கு 30 நிமிடங்கள் ஆகும். இந்த செயல்முறைகளை செய்வதால் பலன் இரண்டு அல்லது மூன்று மாதங்களிலேயே தெரியக்கூடும் என்று கூறுகிறார்கள்.

எனினும், இதுபோன்ற செயல்முறைகளால் பக்கவிளைவுகள் ஏற்படுவதுண்டு. சிராய்புண், உணர்வின்மை, சிவந்து போதல் போன்றவை ஏற்படலாம். இந்த செயல்முறையால் 90 சதவீதம் உடலில் உள்ள குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் கொழுப்பை குறைத்துவிடலாம்.

இதையும் படியுங்கள்:
கல்லீரல் ஆரோக்கியத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்!
பாடி ஸ்கல்ப்டிங் என்றால் என்னவென்று தெரியுமா?

சிகிச்சைக்கு பிறகு செய்ய வேண்டியவை:

தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும், உணவில் தேவையில்லாத கொழுப்புகளை நீக்கவும், நன்றாக உடற்பயிற்சி செய்யவும், நன்றாக தூங்க வேண்டும்.

பொதுவாக, இந்த சிகிச்சை சற்று விலை கூடுதலானதேயாகும். ஐம்பதாயிரம் முதல் மூன்று லட்சம் வரை கூட செலவாகும். உடல் எடை குறைப்பதற்கு சர்ஜரி செய்யும்போது வரும் பயமோ, வலியோ இதில் இல்லை. சர்ஜரிகள் இல்லாமல் பாதுகாப்பான முறையில் செய்யப்படுவது இதனுடைய சாதகமாகும். அதனால் விலை உயர்ந்த செயல்முறையாக இருந்தாலும் நிறைய மக்கள் இதுபோன்ற முறையையே செய்துகொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com